சேலம் உருக்காலை தனியாருக்கு விற்பனை - திமுக , அதிமுக மாநிலங்கவையில் கூட்டாக எதிர்ப்பு

First Published Dec 2, 2016, 4:10 PM IST
Highlights


தமிழகத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு திமுக , அதிமுக, மார்க்சிஸ்ட் , பாமக உள்ளிட்ட பெரும்பாலான எதிர்கட்சிகள் எதிர்த்து வருகின்றன.

 

திமுக தலைவர் கருணாநிதி , மு.க.ஸ்டாலின் , பாமக ராமதாஸ் , மார்க்சிஸ்ட் கட்சியின் ஜி.ஆர் போன்றோர் எதிர்த்து அறிக்கை விட்டனர். 

 

இந்நிலையில் ரூபாய் நோட்டு விவகாரத்தில் பாராளுமன்றம் ஸத்ம்பித்து கிடக்க சேலம் உருக்காலை பிரச்சனையை திமுக ,அதிமுக உறுப்பினர்கள் எழுப்பி அவையை பரபரப்புக்குள்ளாக்கினார்.

 

தமிழகத்தின் முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தினார். 

 

மாநிலங்களவையில் இன்று சேலம் உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து தமிழகம் சார்பாக திமுகவின் திருச்சி சிவா பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

சேலம் உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவு கண்டனத்துகுரியது. இந்த ஆலை ஒன்றும் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் அல்ல. தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. இந்த ஆலையின் மூலம் நேரடியாக 2500 பணியாளர்கள் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். அதே போல் மறைமுகமாக    பலருக்கும் இந்த ஆலை வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. ஆகவே முற்றிலும் இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பேசினார். 

 

இதே கருத்தை வலியுறுத்தி அதிமுக எம்பி விஜிலா சத்யானந்தும் பேசினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜனும் சேலம் உருக்காலையை தனியாருக்கு விடும் முடிவை கைவிட  வேண்டும் என்று பேசினார்.

click me!