முன்னெப்போதும் இல்லாத வகையில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்து வரும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், டெல்லியில் உள்ள ஒரு மசூதிக்கு சென்று அதன் தலைமை மதகுருவை சந்தித்து பேசியுள்ளார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்து வரும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், டெல்லியில் உள்ள ஒரு மசூதிக்கு சென்று அதன் தலைமை மதகுருவை சந்தித்து பேசினார். டெல்லி கஸ்தூரிபா காந்தி மார்க்கில் உள்ள மசூதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கதவுகள் மூடப்பட்ட நிலையில் அவர்களுக்கு இடையே சந்திப்பு நடைபெற்றது. மோகன் பகவத் உடன் மூத்த சங்க பணியாளர்கள் கிருஷ்ண கோபால், ராம் லால் மற்றும் இந்திரேஷ் குமார் ஆகியோர் இருந்தனர். ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தர்ப்பில், ஹிஜாப் சர்ச்சை, ஞானவாபி, மதங்களுக்கு இடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுதல் போன்ற விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: செப்.27 ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி... ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பு!!
ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் கடந்த சில நாட்களாக மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார் என்று ஆர்எஸ்எஸ் பிரச்சாரர் பிரமிக் சுனில் அம்பேகர் தெரிவித்தார். மேலும் இது தொடர்ச்சியான இயல்பான சம்வத் செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் கடந்த மாதமும் ஐந்து முஸ்லிம் தலைவர்களை பகவத் சந்தித்தார். அப்போது நாட்டில் நல்லிணக்க சூழல் நிலவுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சிரஞ்சீவி யோஜனா திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன்... அறிவித்தது ராஜஸ்தான் அரசு!!
கடந்த செவ்வாய் அன்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் பகவத், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்ஒய் குரைஷி, டெல்லியின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங் மற்றும் பல முஸ்லீம் தலைவர்களை சந்தித்தார். முன்னதாக உதாசின் ஆசிரமத்தில் ஆர்எஸ்எஸ் தலைவரைச் சந்தித்த தூதுக்குழுவில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீருதீன் ஷா, முன்னாள் எம்பி ஷாகித் சித்திக் மற்றும் பரோபகாரர் சயீத் ஷெர்வானி ஆகியோர் இருந்ததாக தகவல்கள் வெளியாகின.