பாப்புலர் பிரண்ட் முக்கிய தலைகள் கைது.. தே.பா ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை.

By Ezhilarasan BabuFirst Published Sep 22, 2022, 5:56 PM IST
Highlights

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முன்னாள் பொருளாளர் மற்றும்  கேரள மாநிலத்தின் தலைவர் OMA சலாம் மற்றும் டெல்லி  பாப்புலர் பிரண்ட் தலைவர் பர்வேஸ் அகமது ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முன்னாள் பொருளாளர் மற்றும்  கேரள மாநிலத்தின் தலைவர் OMA சலாம் மற்றும் டெல்லி  பாப்புலர் பிரண்ட் தலைவர் பர்வேஸ் அகமது ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இன்னும் பல்வேறு மாநிலத் தலைவர்கள் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமைச்சர் NSA, தேசிய பாதுகாப்புத் துறை தலைவர் அஜித் தோவால் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி நாடு முழுவதும் 10 மாநிலங்களில் அந்த அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் இல்லங்களில் தேசிய புலனாய்வு முகமை,  NIA அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கேரளா, தமிழ்நாடு ,  கர்நாடகா ,  ஆந்திரா , தெலுங்கானா , பீகார் , உத்தரபிரதேசம் , ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர் ஓஎம்ஏ சலாம் மற்றும் டெல்லி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர் பர்வேஸ் அகமது உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா  முன்னாள் பொருளாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இதுவரையில் 100க்கும் அதிகமான நிர்வாகிகள் கைதாகியுள்ளனர். 

இதையும் படியுங்கள் : pfi: kerala harthal: harthal tomorrow: என்ஐஏ சோதனை: கேரளாவில் நாளை ஹர்தால் நடத்த பிஎப்ஐ அழைப்பு

பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்தல், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்து கொடுத்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட இயக்கங்களில் இளைஞர்கள் மற்றும் மக்களை சேர தூண்டுதல் போன்ற செயல்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

ஆந்திரா, தெலுங்கானா, உத்திரப்பிரதேசம் , கேரளா , கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 200க்கும் அதிகமான என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பத்துக்கும் அதிகமான மாநிலங்களிலும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஒரு சமூக இயக்கத்தின் மீது தேசிய புலனாய்வு முகமை எடுத்த மிகப்பெரிய நடவடிக்கை இது என பார்க்கப்படுகிறது. இன்று காலை கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், மாஞ்சேரியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர் ஓ.எம்.ஏ சலாம் மற்றும் அந்த அமைப்பின் நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. 

இதையும் படியுங்கள் : ஸ்டாலின் ஆட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்தவே தமிழகத்தில் என்ஐஏ சோதனை.. ரத்தம் கொதிக்கும் நெல்லை முபாரக்.

தேசிய புலனாய்வு முகமை உடன் சேர்ந்து அமலாக்கத்துறை சோதனையும் நடந்து வருகிறது. இந்த சோதனையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல கேரள மாநிலத்தின் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில  பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் இதுகுறித்து கூறுகையில், சமீபத்தில் நாட்டில் நடக்கும் மிகப்பெரிய அநியாயம் இது, பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களை குறிவைத்து அட்டூழியம் நடந்து வருகிறது. பாசிச ஆட்சியின் இந்த  நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்தார். 

இதேபோல தமிழகத்தின் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி என பல இடங்களில் என்ஐஏ சோதனை நடந்து வருகிறது.  இதில் கடலூர் மாவட்ட தலைவர் பயாஸ் அகமது, மதுரை மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் ஆகியோரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதேபோல உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் முன்னாள் பொருளாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில்தான் இது தொடர்பாக  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் பாதுகாப்புத் துறை உயரதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!