சிரஞ்சீவி யோஜனா திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன்... அறிவித்தது ராஜஸ்தான் அரசு!!

By Narendran S  |  First Published Sep 22, 2022, 6:33 PM IST

ராஜஸ்தானில் அக்டோபர் முதல் சீரஞ்சீவி யோஜனா திட்டத்தின் கீழ் 1.35 கோடி குடும்பத் தலைவிகளுக்கு ஸ்மார்ட் ஃபோன் வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 


ராஜஸ்தானில் அக்டோபர் முதல் சீரஞ்சீவி யோஜனா திட்டத்தின் கீழ் 1.35 கோடி குடும்பத் தலைவிகளுக்கு ஸ்மார்ட் ஃபோன் வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுக்குறித்து பேசிய அம்மாநில தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கல்லா,  சீரஞ்சீவி யோஜனா திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போன்கள் வழங்க கூடுதலாக ரூ.2,300 கோடி தேவை என்ற கோரிக்கைக்கு பேரவை கடந்த செவ்வாய்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக, இத்திட்டத்திற்காக ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: பாப்புலர் பிரண்ட் முக்கிய தலைகள் கைது.. தே.பா ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை.

Tap to resize

Latest Videos

ஜன் சூச்னா, இ-மித்ரா, இ-தர்தி மற்றும் ராஜ் சம்பார்க் ஆகிய செயலிகளை அரசு உருவாக்கியுள்ளது. அவை இந்த ஸ்மார்ட்போன்களில் நிறுவப்படும். பிற பயன்பாடுகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. சீரஞ்சீவி யோஜனா என்பது ஒரு உலகளாவிய சுகாதார திட்டமாகும். இதில் ராஜஸ்தான் அரசு ஒரு குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது. மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஸ்மார்ட்போன்களுக்கான அனைத்து செலவுகளையும் மாநில அரசே ஏற்கும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: என்ஐஏ சோதனை: கேரளாவில் நாளை ஹர்தால் நடத்த பிஎப்ஐ அழைப்பு

முன்னதாக, ராஜேந்திர ரத்தோர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த கல்லா, 1.35 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மூன்று ஆண்டுகள் இணைய இணைப்புடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும். மூன்று ஆண்டுகளில் ரூ.12,000 கோடி செலவில் திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் முதல்வர் அசோக் கெலாட் 'முக்யமந்திரி டிஜிட்டல் சேவா யோஜனா' திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், சீரஞ்சீவி யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள 1.35 கோடி குடும்பத் தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

click me!