பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சிக்காக ரூ.830 கோடி செலவு.. ஆம் ஆத்மி தலைவர் மீது வழக்குப்பதிவு

By Ramya s  |  First Published May 2, 2023, 10:54 AM IST

பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சிக்காக ரூ.830 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று கூறிய ஆம் ஆத்மி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கடந்த ஞாயிற்றுக்கிழமை 100 எபிசோட்களை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடியின் வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்காக பாஜக தலைமையிலான மத்திய அரசு இதுவரை ரூ.830 கோடி செலவிட்டுள்ளதாக ஆம் ஆத்மி குஜராத் தலைவர் இசுதன் காத்வி கூறியிருந்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்த அவர் “ வரி செலுத்துவோரின் பணத்தில் ரூ. 830 கோடி இதுவரை மாதாந்திர வானொலி முகவரியின் 100 எபிசோட்களுக்கு செலவிடப்பட்டுள்ளது..” என்று குறிப்பிட்டுள்ளார். 

இசுதன் காத்வி எந்தத் தகுந்த தரவுகளும் இல்லாமல் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. "அரசாங்கத்தின் சார்பில்  காவல்துறையின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. ஏப்ரல் 29 ஆம் தேதி சைபர் கிரைம் பிரிவில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பேசிய சைபர் கிரைம் போலீசார், தனது கூற்றை ஆதரிக்க எந்த நம்பகமான தரவுகளும் இல்லாமல் 'மன் கி பாத்' க்கு எதிராக ட்வீட் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. நாங்கள் ஆதாரங்களை சேகரிப்போம். அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை" என்று சைபர் கிரைம் உதவி போலீஸ் கமிஷனர் ஜேஎம் யாதவ் அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க : ஸ்டாலினுக்கு என்னை பார்த்து பயம்! இனி எந்த தேர்தல் வந்தாலும் திமுகவுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்! இபிஎஸ்.!

இந்த நிலையில் இந்த எஃப்ஐஆர் தொடர்பாக பாஜகவை கடுமையாக சாடிய ஆம் ஆத்மி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை “அரசியல் படுகொலை” செய்ய பாஜக விரும்புவதால், ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக குற்றம்சாட்டியது. செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யும், தேசிய செய்தி தொடர்பாளருமான ராகவ் சாதா, “ஒரு புதிய நாள் மற்றும் புதிய எஃப்.ஐ.ஆர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். ட்விட்டரில் அரசியல் ரீதியாக சிறிய சர்ச்சையை ஏற்படுத்தியதால் காத்வி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், விருது பெற்ற மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கியபாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய தலைநகரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மல்யுத்த வீரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகிய பின்னரே டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்..” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், பத்திரிகை தகவல் பணியகமான PIB-ன் உண்மைச் சரிபார்ப்பு பிரிவு, பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சிக்கு ஒரு எபிசோடிற்கு ரூ. 8.3 கோடி செலவாகும் என்றும், இதுவரை ரூ. 830 கோடி விளம்பரங்களுக்குச் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டதை நிராகரித்துள்ளது. இது தவறான கூற்று எனவும், மன் கி பாத்தின் மொத்த விளம்பரங்களின் மதிப்பு ரூ. 8.3 கோடி என்றும், ஒரு எபிசோடுக்கான செலவு அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிங்க : சாலை ஓரத்தில் தண்ணீர் குடிக்கும் புலி.. காத்திருந்து சென்ற வாகனங்கள்.. வைரல் வீடியோ..

 

 

click me!