முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் ஆந்திரா மாநிலத்தில் முதல்வர் அலுவலகத்திற்கு ரூ.3.6 கோடிக்கு முட்டை பப்ஸ் வாங்கப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரா மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு தன்னை பழிவாங்குவதாக முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம் சாட்டி வருகிறார்.
எதிரிக்கும் வரக்கூடாத சோகம்; மாணவியின் கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த தந்தை, சகோதரி
undefined
இந்நிலையில், ஜெகன் மோகன் ஆட்சியில் இருந்த போது முதல்வர் அலுவலகத்திற்கு முட்டை பப்ஸ் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி 2019 முதல் 2024 வரை ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன் மோகன் ஆட்சி காலத்தில் முதல்வர் அலுவலகத்திற்கு ரூ.3.62 கோடிக்கு முட்டை பப்ஸ் வாங்கப்பட்டுள்ளது.
தவறான திசையில் பைக் பயணம்; எமனாக வந்த பள்ளிப் பேருந்து - ஒரே நிமிடத்தில் காலியான மொத்த குடும்பம்
ஒரு வருடத்திற்கு சராசரியாக ரூ.72 லட்சத்திற்கு முட்டை பப்ஸ் வாங்கப்பட்டுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி கூறியுள்ளது. அதன்படி ஒவ்வொரு நாளும் 993 முட்டை பப்ஸ்கள் சாப்பிடுவதாக கணக்கிடப்படுகிறது. ஒட்டுமொத்த ஆட்சி காலத்தில் 18 லட்சம் முட்டை பப்ஸ்கள் வாங்கப்படதாகவும் அர்த்தம். இதன் மூலம் பப்ஸ்களுக்கு மட்டுமே கடந்த 5 ஆண்டுகளில் 3.6 கோடி ரூபாய் பப்ஸ்க்காக செலவிடப்பட்டுள்ளதென்றால் பணம் எந்த அளவிற்கு முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.