Doctor Case | ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது! குறைந்தபட்சம் சிரிக்காமல் இருங்கள்! Kpailsibalலை கண்டித்த Tushar Mehta

Published : Aug 22, 2024, 03:40 PM ISTUpdated : Aug 22, 2024, 03:52 PM IST
Doctor Case | ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது! குறைந்தபட்சம் சிரிக்காமல் இருங்கள்! Kpailsibalலை கண்டித்த Tushar Mehta

சுருக்கம்

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, மேற்குவங்க அரசு வழக்கறிஞர் சார்பில் ஆஜரான கபில் சிபலுக்கு, சிபிஐ சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடும் கண்டனம் தெரிவித்தார்.  

கொல்கத்தாவில் பயிற்சி மருத்தவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் நாடு தழுவிய அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதனால் மேற்கு வங்கம் மற்றும் டெல்லியில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் ஜூனியர் மருத்துவர்கள் பணியில் இருந்து விலகி, மறைந்த மாணவிக்கு நீதி மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கோரி வருகின்றனர்.

இதனிடையே இந்த விவகாரத்தை  உச்ச நீதிமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை suo motu வழக்காக எடுத்தது. ஆகஸ்ட் 22ம் தேதி விசாரணைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, "ரீ: ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி பெறும் மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவம் மற்றும் தொடர்புடைய பிரச்சினை" என்ற தலைப்பில் இந்த விவகாரத்தை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  வழக்கு விசாரணையின்போது, மேற்குவங்க அரசு வழக்கறிஞர் சார்பில் ஆஜரான கபில் சிபலுக்கு, சிபிஐ சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடும் கண்டனம் தெரிவித்தார்.

அங்கு ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது. குறைந்தபட்ச்சம் சிரிக்காமல் இருங்கள் என வழக்கறிஞர் கபில்சிபலை பார்த்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடும் கோபமாக பேசினார். 

 

 

அடுத்த விசாரணையில் கொல்கத்தா காவல்துறை அதிகாரியை ஆஜராகுமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. அப்போது, நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கற்பழிப்பு-கொலை குறித்த முதல் பதிவை பதிவு செய்த கொல்கத்தா காவல்துறை அதிகாரி, அடுத்த விசாரணையில் ஆஜராகி, நுழைவு நேரத்தை வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!