அமேதியில் நான் போட்டியிட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்: ராபர்ட் வதேரா

By SG Balan  |  First Published Apr 4, 2024, 6:41 PM IST

ஸ்மிருதி இரானியைத் தேர்ந்தெடுத்தது தவறு என்று அமேதி மக்கள் புரிந்துகொண்டுவிட்டனர் எனவும் காந்தி குடும்ப உறுப்பினர் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகின்றனர் எனவும் ராபர்ட் வத்ரா கூறியுள்ளார்.


தொழிலதிபரும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வத்ரா அமேதி தொகுதியில் தற்போதைய எம்பியான ஸ்மிருதி இரானியை எதிர்த்து தான் போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் எனக் கூறியுள்ளார்.

வியாழக்கிழமை செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி கொடுத்த அவர், "அமேதி மக்கள் தங்கள் தவறை புரிந்துகொண்டனர். மேலும், இப்போது, காந்தி குடும்ப உறுப்பினர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். நான் அரசியலில் சேர்ந்தால் அமேதியை தேர்வு செய்ய வேண்டும் என்று அமேதி மக்களிடம் இருந்து எனக்கு கோரிக்கை வந்தது. 1999இல் அமேதியில் எனது முதல் அரசியல் பிரச்சாரம் எனக்கு நினைவிருக்கிறது. பிரியங்காவும் அப்போது இருந்தார்" என்று ராபர்ட் வத்ரா கூறினார்.

Tap to resize

Latest Videos

லோன் எடுத்து கார் வாங்கப் போறீங்களா? என்னென்ன செலவு இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு முடிவு பண்ணுங்க!

அமேதி தொகுதி பல ஆண்டுகளாக காந்தி குடும்பத்தினரின் கோட்டையாக இருந்தது. 2019 மக்களவைத் தேர்தலில் ஸ்மிருதி இரானி அந்தத் தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்தார். அதற்கு முன் ராகுல் காந்தி 2004, 2009 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வயநாட்டில் போட்டியிட ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளரை காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை. அமேதியைத் தவிர, ரேபரேலி எம்.பி.யாக இருந்த சோனியா காந்தியும் மாநிலங்களவை எம்.பி.யாக மாறிவிட்டாதல், இந்த முறை அந்தத் தொகுதியில் போட்டியிட இருப்பவர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஸ்விக்கி பெயரைச் சொல்லி ரூ.3 லட்சம் அபேஸ்! கூகுள் சர்ச்சை நம்பி மோசம் போன முதியவர்!

இந்நிலையில், "இப்போதய எம்.பி. மீது அமேதி மக்கள் வருத்தத்தில் உள்ளனர். அமேதி மக்கள் தாங்கள் செய்த தவறைப் புரிந்துகொண்டுள்ளனர். தற்போதைய எம்.பி., தன் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி, காந்தி குடும்பத்தினரை குற்றம் சாட்டுகிறார். அமேதி மற்றும் ரேபரேலி மற்றும் சுல்தான்பூரில் பல ஆண்டுகளாக, காந்தி குடும்பத்தினர் கடுமையாக உழைத்துள்ளனர். இப்போது அமேதி மக்கள் ராகுல் காந்திக்கு பதிலாக ஸ்மிருதி இரானியைத் தேர்ந்தெடுத்ததற்காக மனம் வருந்துகிறார்கள்" ராபர்ட் வதேரா கூறியயுள்ளார்.

"நான் எம்.பி.யாக விரும்பினால் அமேதி தொகுதியைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர்கள் என்னை அணுகுகிறார்கள்" என பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா தெரிவித்துள்ளார். "எனது பிறந்தநாளுக்கு அவர்கள் வாழ்த்துகள் சொல்கிறார்கள்.  சமூக வலைதளங்கள் மூலம் என்னைத் தொடர்புகொள்கின்றனர். அவர்களுக்காக நான் எவ்வளவு தொண்டு செய்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியும்" எனவும் அவர் சொல்கிறார்.

click me!