காசி விஸ்வநாதர் கோயிலுக்கு பக்தர்கள் தாராளமாக அளித்த காணிக்கையால் அக்கோயிலின் வருவாய் புதிய உச்சத்தை தொட்டுள்ளது
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. கங்கை நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள விஸ்வநாதராக சிவன் காட்சியளிக்கும் இக்கோயில், இந்தியாவின் மிக முக்கியமான இந்து கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்த் உசுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு பக்தர்கள் தாராளமாக அளித்த காணிக்கையால் அக்கோயிலின் வருவாய் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, 2023-24 நிதியாண்டில் காசி விஸ்வநாதர் கோயில் ரூ.83.34 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 2022-23ஆம் நிதியாண்டு வருவாயை ஒப்பிடுகையில் இது 42.43 சதவீதம் அதிகமாகும். குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் மட்டும் கோயிலுக்கு ரூ.11.14 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கோவிலுக்கு இதுவரை இல்லாத ஒரு மாத வசூலாகும்.
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 31ஆவது முறையாக நீட்டிப்பு!
இதுகுறித்து பேசிய கோயிலின் தலைமை செயல் அதிகாரி விஸ்வ பூஷன், “ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளை (SKVTT) 2023-24 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் மற்றும் செலவினத்தை பதிவு செய்துள்ளது. வருமானத்தை பொறுத்தவரை அதன் மொத்த வருவாய் ரூ.83.34 கோடியாகும். இது 2022-23 ஆம் ஆண்டின் மொத்த வருவாயை விட 42.43% அதிகமாகும். செலவினத்தை பொறுத்தவரை ரூ.25.32 கோடி செலவாகியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 40.38% அதிகமாகும்.
நன்கொடையாக பெறப்பட்ட விலை மதிப்பற்ற உலோகங்களின் மதிப்பை சேர்க்காமலேயே, கோவிலுக்கு ரூ.69.92 கோடி வருவாய் கிடைத்ததால், கடந்த பிப்ரவரி மாத இறுதியிலேயே முந்தைய சாதனைகள் முறியடிக்கப்பட்டன. 2022-23 ஆம் ஆண்டில், கோயிலின் வருமானம் ரூ.58.51 கோடியாகவும், 2018-19 மற்றும் 2019-20 நிதியாண்டுகளில் ரூ.26 கோடிக்கு அதிகமாகவும் இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.