கருப்பு பண வேட்டை தோல்வியா? - ரிசர்வ் வங்கி பரபரப்பு அறிக்கை

First Published Dec 28, 2016, 9:34 AM IST
Highlights


நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.15.40 லட்சம் கோடி மதிப்பிலான செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளில் 90 சதவீதம் வங்கிக்கு வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அப்படி என்றால் மத்தியஅரசு கூறுகின்ள கருப்பு பணம் எங்கே போனது என்ற கேள்வி எழுந்துள்ளது. நாட்டில் புழக்கத்தில் இருந்த அனைத்து செல்லாத ரூபாய் நோட்டுகளும் மாற்றப்பட்டால், கருப்புபணத்தை ஒழிக்கப்போகிறேன் என்று கூறிய பிரதமர் மோடியின் வார்த்தை வெறும் வெற்றுவார்த்தையாக் போனதா?, அல்லது, கருப்பு பணத்தை ஒழிக்கும் மத்தியஅரசின் முயற்சி தோல்வி அடைந்துவிட்டதா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நாட்டில் 86 சதவீதம் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி அறிவித்தார். நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், 50 நாட்களில் கருப்பு பணம் முழுவதும் ஒழிக்கப்பட்டு விடும், அதுவரை மக்கள் பொறுமையாக இருந்து, சிரமங்களை தாங்கிக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

அதன்படி, பிரதமர் மோடி கேட்டுக்கொண்ட 50 நாட்கள் முறைப்படி இன்றுடன் முடிந்துவிட்டாலும், 30ந்தேதி வரை அவர் அவகாசம் இருந்தது. மத்திய அரசு எண்ணப்படி, செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளில் கருப்பு பணம் ஏறக்குறைய ரூ. 3 லட்சம் கோடி வங்கிக்கு வராமல் தங்கிவிடும் என எதிர்பார்த்தது. 

ஆனால், புழக்கத்தில் இருந்த ரூ.15.4லட்சம் கோடியில் 90 சதவீதம் வங்கிக்கு திரும்பவிந்துவிட்டதால், மத்தியஅரசு கூறிய கருப்புபணம் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருப்பு பணம், கள்ள நோட்டுகளை  ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பின் மூலம் ஒழிக்க முடியாது என்று தொடக்கத்திலேயே அனைத்து தரப்பினரும் கூறினார்கள். அனைத்தையும் மீறி இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்தியது மக்களை பணத்தட்டுப்பாட்டில் சிக்கவைத்து பாடாய் படுத்தியது.

 இதனால், 100-க்கும் மேற்பட்டமக்கள் வங்கியில் பணம் பெற வரிசையில் நின்ற போது உயிரிழந்தனர்.

இந்த 50 நாட்கள் நடவடிக்கையின் மூலம், ரூ.15.40 லட்சம் செல்லாத ரூபாயில் மத்திய அரசு எதிர்பார்த்த ரூ.3 லட்சம் கோடிக்கு மேலான கருப்புபணம் வங்கிக்கு வராமல் இருந்து, கருப்புபணப் பதுக்கல்காரர்களிடமே தங்கி இருந்தால், இந்த திட்டத்தை வெற்றிகரமானது எனக் கூற முடியும்.

ஆனால், புழக்கத்தில் இருந்த செல்லாத ரூபாயில் 90 சதவீதம் பணம் வந்துவிட்டது என்றால், மத்தியஅரசு கூறிய கருப்பு பணம் எங்கே சென்றது,? அனைத்து கருப்புபணத்தை வெள்ளையாக மாற்ற மத்தியஅரசே வழி ஏற்படுத்திக்கொடுத்துவிட்டதா? அல்லது, கருப்புபணத்தை கண்டுபிடிக்கும் விசயத்தில் மோடியின் அரசு தோல்வி அடைந்துவிட்டதா? என்ற சந்தேகத்தில் மக்கள் மத்தியில் விதைத்துள்ளது.

click me!