எப்படி டெபாசிட் செய்யலாம்...? ரிசர்வ் வங்கி அறிக்கை என்னதான் சொல்கிறது....?

Asianet News Tamil  
Published : Dec 20, 2016, 09:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
எப்படி டெபாசிட் செய்யலாம்...? ரிசர்வ் வங்கி அறிக்கை என்னதான் சொல்கிறது....?

சுருக்கம்

வங்கியில் செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதில் புதிய கிடுக்கிப்பிடிகளை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது. 

நாட்டில் கருப்புபணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், புழக்கத்தில் இருந்த ரூ. 1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் மக்கள் வங்கியில் இருந்து பணம் எடுக்க பல கெடுபிடிகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில், கருப்பு பணத்தை வங்கியில் அதிகமாக டெபாசிட் செய்வதை தடுக்கும் வகையில் தனது நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

அதன்படி ரிசர்வ் வங்கி  புதிய உத்தரவுகளை நேற்று பிறப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

 அதன்படி, தனிநபர் ஒருவர், பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தனது வங்கிக்கணக்கில் ரூ.5 ஆயிரத்துக்கு அதிகமாக இம்மாதம் 30-ந்தேதிக்குள் பல முறை டெபாசிட் செய்ய முடியாது, ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். உதாரணமாக ஒருவர் செல்லாத ரூபாய் நோட்டுகளாக ரூ. 5100 டெபாசிட் செய்துவிட்டால், அதன்பின் ரூ. 5 ஆயிரத்துக்கு அதிகமாக 2-வது முறை டெபாசிட் செய்ய முடியாது. 

 செல்லாத ரூபாய்களாக ரூ. 5 ஆயிரம்வரை வங்கிக்கணக்கில் எத்தனை முறை வேண்டுமானாலும் டெபாசிட்செய்யத் தடையில்லை. உதாரணமாக ரூ. 3 ஆயிரம், ரூ. 4 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் என எத்தனை முறைவேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்.  ஆனால், வருமான வரித்துறையினர் குறிப்பிட்ட கணக்கு உடையவரை விசாரனைக்குள் கொண்டு வந்தால், அதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்

PREV
click me!

Recommended Stories

லிப்ட் கேட்ட பெண் வேனில் வைத்து கூட்டு பலாத்காரம்.. நடுரோட்டில் தள்ளிவிட்டு எஸ்கேப் ஆன கும்பல்!
இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதே நாங்கதான்..! உலகத்துக்கே நாட்டாமையாக கொக்கரிக்கும் சீனா..!