டிஜிட்டல் பணபரிமாற்றம்….சிறு வணிகர்களை ஊக்குவிக்க 2 சதவீத வரி குறைப்பு…

First Published Dec 20, 2016, 8:34 AM IST
Highlights


டிஜிட்டல் பணபரிமாற்றம்….சிறு வணிகர்களை ஊக்குவிக்க 2 சதவீத வரி குறைப்பு…

உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள்  ஒழிக்கப்பட்ட பின்னர்  புதிதாக மிகக் குறைவான அளவே 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை  மத்திய அரசு வெளியிட்டது.  இதனால் நாடு முழுவதும் கடும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனையடுத்து மக்கள் அனைவரும் ரொக்க பண வரவு செலவை தவிர்த்து ‘டிஜிட்டல்’ பணபரிமாற்றத்தை மேற்கொள்ள  மத்திய  அரசு ஊக்குவித்து  வருகிறது.

இதனையடுத்து சிறு மற்றும் குறு வணிகர்கள்  டிஜிட்டல்  பண பரிமாற்றம் மேற்கொள்வதற்காக ஸ்வைப்  எந்திரங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டிஜிட்டல் பண பரிமாற்றத்தை பிரபலப்படுத்துக் வகையில் ஸ்வைப் எந்திரங்களை பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு  பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில்  வங்கிகள் மற்றும் ‘டிஜிட்டல்’ பணபரிமாற்றம் மூலமாக 2 கோடி ரூபாய் வரை வர்த்தகம் மேற்கொள்ளும் சிறு வணிகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு வரியில் 2 சதவீதம் அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த சலுகையை பயன்படுத்தும் சிறு வணிகர்கள்  இனி லாபத்தில் 6 சதவீதம் வரி செலுத்தினால் போதும் என்றும் ஆனால் ரொக்க வரவு செலவு மேற்கொள்ளும் சிறுவணிகர்களுக்கு பழையபடி 8 சதவீத வரியே தொடரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கான சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

click me!