100 டிரைவிங் காலேஜ்; 3 ஆண்டுகளில் 4 லட்சம் பேருக்கு வேலை பிரதமர் மோடியின் அடுத்த அதிரடி திட்டம்

 
Published : Dec 19, 2016, 08:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
100 டிரைவிங் காலேஜ்; 3 ஆண்டுகளில் 4 லட்சம் பேருக்கு வேலை பிரதமர் மோடியின் அடுத்த அதிரடி திட்டம்

சுருக்கம்

100  டிரைவிங் காலேஜ்....3 ஆண்டுகளில் 4 லட்சம் பேருக்கு வேலை...

பிரதமர் மோடியின் அடுத்த அதிரடி திட்டம்

நாட்டில் உள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக முதல் முறையாக கான்பூரில் இந்திய திறன் கழகத்துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

பிரதமராக பதவியேற்றுக் கொண்டவுடன் சிங்கப்பூருக்கு பயணம் சென்ற மோடி, அங்குள்ள தேசிய தொழில் நுட்ப கழகத்தை கண்டு, அதன் அடிப்படையில் அமைப்புகளை இந்தியாவில் உருவாக்க எண்ணினார்.  அதன் அடிப்படையிலேயே தற்போது கான்பூரில் இந்திய திறன் கழகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்த அமைப்பானது மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் தேசிய தொழில் நுட்ப கழகத்துடன் இணைந்து துவங்கப்பட்டுள்ளது. இதே போல் மேலும் இந்தியாவெங்கும் ஆறுகழகங்களை உருவாக்க அமைச்சரகம் திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள இளைஞர்களுக்காக பிரதான் மந்திரி கவுசால்  கேந்திரா மற்றும் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் 31 
பிரதான் மந்திரி கவுசால் கேந்திரா மையங்களை மோடி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் பல நிறுவனங்களுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அடுத்த 3 ஆண்டுகளில் 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், 
பிரதான் மந்திரி கவுசால் கேந்திராமையத்தை திறக்க மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து  மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ நாட்டில் ஓட்டுநர்களின் நிலை குறித்து பிரதமர் மோடி கவலை கொண்டதையடுத்து, நாடுமுழுவதும் 100 ஓட்டுநர் பயிற்சி மையங்களை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக என்.எஸ்.டி.சி.ஓலா கேப்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஓலா கேப்சுக்கு ஒரு லட்சம் ஓட்டுநர்கள் தேவைப் படுகிறார்கள்'' எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பிரதமர் மோடி தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தையும் அறிவித்தார். இந்த திட்டத்தை வெற்றிகரமாக்க மாநிலங்கள் ஒத்துழைப்பு என்பது மிகவும் அவசியம். இது குறித்து அமைச்சகம் வௌியிட்ட அறிவிப்பில், “ 23 ஆயிரம் தனியார் நிறுவனங்கள்தான் நாடுமுழுவதும் பயிற்சியாளர்களை ஏற்றுக்கொண்டு பயிற்சி அளித்து வருகின்றன. இனி வருங்காலத்தில் மாநில அரசுகளும் இதற்கு ஆதரவு தந்து, கூடுதலாக நிறுவனங்கள்  பயிற்சியாளர்களை ஏற்க உதவ வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!