18 பேர் உயிரிழந்த வெடிகுண்டு தாக்‍குதல் : தீவிரவாதிகள் 5 பேருக்‍கு மரண தண்டனை!

Asianet News Tamil  
Published : Dec 19, 2016, 08:27 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
18 பேர் உயிரிழந்த வெடிகுண்டு தாக்‍குதல் : தீவிரவாதிகள் 5 பேருக்‍கு மரண தண்டனை!

சுருக்கம்

18 பேர் உயிரிழந்த வெடிகுண்டு தாக்‍குதல் : தீவிரவாதிகள் 5 பேருக்‍கு மரண தண்டனை!

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெடிகுண்டுத் தாக்‍குதல் நடத்தி 18 பேர் உயிரிழக்‍கக்‍ காரணமாக இருந்த இந்தியன் முஜாஹிதின் தீவிரவாதிகள் Yasin Bhatkal உள்ளிட்ட 5 பேருக்‍கு மரண தண்டனை விதிக்‍கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் Dilsukhnagar, பகுதியில் 2 இடங்களில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்‍குதலில், 18 பேர் உயிரிழந்தனர். 131 படுகாயமடைந்தனர். இந்த தாக்‍குதல் குறித்து விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பு,  இந்தியன் முஜாஹிதின் தீவிரவாத அமைப்பை உருவாக்‍கிய Sidibapa என்கிற Yasin Bhatkal, பாகிஸ்தானைச் சேர்ந்த Zia ur Rahman, Asadullah Akhtar, Tahaseen Akhtar, Ajaz Shaikh ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தது. ஹைதராபாத்தில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்‍கு விசாரணை, கடந்த நவம்பர் 7ம் தேதி முடிவடைந்தது. Yasin Bhatkal உள்ளிட்டோர் குற்றவாளிகள் அறிவிக்‍கப்பட்ட நிலையில், இன்று தண்டனை விவரம் குறித்து தீர்ப்பு அளிக்‍கப்பட்டது. இந்தியன் முஜாஹிதின் தீவிரவாதிகள் Yasin Bhatkal உள்ளிட்ட 5 பேருக்‍கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

PREV
click me!

Recommended Stories

இந்தியாவுல இல்லப்பா.. துபாய்ல இருக்கேன்! ஓஸ்மான் ஹாதி கொலைக் குற்றவாளி வெளியிட்ட வீடியோவால் போலீஸ் அதிர்ச்சி!
தமிழகம் வருகிறார் அமித் ஷா! ஸ்ரீரங்கத்தில் தரிசனம், திருச்சியில் பொங்கல்.. 2026-க்கு பக்கா பிளான்!