தொழிலாளர்களின் வைப்பு நிதி வட்டி விகிதம் 8.65%-மாக குறைப்பு : மத்திய அரசு தகவல்!

First Published Dec 19, 2016, 8:20 PM IST
Highlights


தொழிலாளர்களின் வைப்பு நிதி வட்டி விகிதம் 8.65%-மாக குறைப்பு : மத்திய அரசு தகவல்!

தொழிலாளர்கள் வைப்பு நிதிக்‍கான வட்டி விகிதத்தை மத்திய அரசு 8.8 சதவீதத்தில் இருந்து, 8.65 சதவீதமாக குறைத்துள்ளது.

தொழிலாளர்களின் வைப்பு நிதிக்‍கான வட்டி விகிதத்தை 2015-2016ம் ஆண்டில் 8.8 சதவீதத்தில் இருந்து 8 புள்ளி 7 சதவீதமாக குறைத்து மத்திய நிதியமைச்சகம் அறிவித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்‍கையைக்‍ கண்டித்து, நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய அரசு மீண்டும் 8.8 சதவீதம் என்ற அளவில் வட்டி விகிதத்தை அளித்து வந்தது. இந்நிலையில், தற்போது தொழிலாளர்களின் வைப்பு நிதிக்‍கான வட்டி விகிதத்தை மத்திய அரசு தற்போது 8.8 சதவீதத்திலிருந்து, 8.65 சதவீதமாகக்‍ குறைத்து அறிவித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் தொழிலாளர் வைப்பு நிதியில் பங்குசெலுத்திவரும் 4 கோடிக்‍கும் மேற்பட்ட ஊழியர்களின் வைப்பு நிதியின் வட்டி விகிதம் இந்த நிதியாண்டில் குறைக்‍கப்படுகிறது. 

tags
click me!