கடந்த 2000ம் ஆண்டில் டெல்லி செங்கோட்டை தாக்குதலில் கைதான லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி முகமது ஆரிப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
கடந்த 2000ம் ஆண்டில் டெல்லி செங்கோட்டை தாக்குதலில் கைதான லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி முகமது ஆரிப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
தீவிரவாதி முகமது ஆரிப் தாக்கல் செய்த சீராய்மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் உத்தரவிட்டார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு
டெல்லி செங்கோட்டையில் கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி முகமது ஆரிப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2007ம் ஆண்டு தீவிரவாதி முகமது ஆரிப்புக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இரு பாதுகாப்புப்படை வீரர்கள் கொல்லப்பட்டதால், தீவிரவாதி முகமது ஆரிப்புக்கு ரூ.4.75 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
போலீஸ் டிஎஸ்பி சப்-இன்ஸ்பெக்டராக பதவி இறக்கம்: உ.பி முதல்வர் ஆதித்யநாத் அதிரடி: முழுவிவரம்
இந்த தூக்கு தண்டனைக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2011ம் ஆண்டு தண்டனையை உறுதி செய்தது.
இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து தீவிரவாதி முகமது ஆரிப் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த 2011ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இருப்பினும் 2வது முறையாக முகமது ஆரிப் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க கடந்த 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் முன்வந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் பீலா எம் திரிவேதி தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி யுயு லலித், நீதிபதி திரிவேதி அமர்வு கூறுகையில் “ இந்த வழக்கில் குற்றவாளியின் குற்றம் முழுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியின் செயல் என்பது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதல். ஆதலால், குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்கிறோம். சீராய்வுமனு” எனத் தீர்ப்பளித்தனர்.