குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை எப்போது நடத்தலாம், எத்தனை கட்டங்களாக நடத்தலாம் என்பது குறித்த தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று நண்பகலில் அறிவிக்க உள்ளது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை எப்போது நடத்தலாம், எத்தனை கட்டங்களாக நடத்தலாம் என்பது குறித்த தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று நண்பகலில் அறிவிக்க உள்ளது.
குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி முடிகிறது, ஆதலால், பதவிக்காலம் முடிவதற்கு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை இன்று அறிவிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீஸ் டிஎஸ்பி சப்-இன்ஸ்பெக்டராக பதவி இறக்கம்: உ.பி முதல்வர் ஆதித்யநாத் அதிரடி: முழுவிவரம்
இமாச்சலப்பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இமாச்சலப்பிரதேசத்துக்கு தேர்தல் தேதியை கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, வரும் 12ம் தேதி இமாச்சலப்பிரதேசத்தில் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
குஜராத் மாநிலத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது. இமாச்சலப்பிரதேசத் தேர்தல் முடிந்து ஒரு மாதத்துக்குப்பின்புதான் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஆதலால், இரு மாநிலங்களுக்கும் சேர்த்துதான் வாக்கு எண்ணிக்கை இருக்கும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே மறைமுகமாகத் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவி ஏற்புக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரணை
ஆதலால், குஜராத் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தவும், வாக்கு எண்ணிக்கையும் இமாச்சலப்பிரதேச மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் சேர்த்து நடத்தப்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2017ம் ஆண்டு இமாச்சலப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத்துக்கு வெவ்வேறு தேதிகளில் வாக்குப்பதிவு நடந்தது, ஆனால், வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் நடத்தப்பட்டது. அதேபோல இந்தமுறையும் இருக்கலாம் எனத் தெரிகிறது
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் தேர்தலுக்குப்பின், குஜராத், இமாச்சலப்பிரதேச தேர்தல் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருக்கிறது.
நிலக்கரி ஊழல்: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கப்பிரிவு சம்மன்
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி வளர்ந்து வருகிறது இது காங்கிரஸ், பாஜக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தைப் பொறுத்தவரை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலும் சிவோர்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் பாஜக 135 இடங்களில் இருந்து 143 இடங்களை வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.