
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை இரு கட்டங்களா சட்டப்பேரவை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி முடிகிறது, ஆதலால், பதவிக்காலம் முடிவதற்கு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை இன்று அறிவித்தது
பாம்பன் பாலம் மட்டுமா! ஆங்கிலேயர்கள் கட்டிய இந்தியாவின் டாப் 5 பாலங்கள் உங்களுக்கு தெரியுமா ?
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஊகடங்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. இதில் 142 பொதுத்தொகுதி, 17 தொகுதி எஸ்சிக்களுக்கானது, 23தொகுதி எஸ்டி பிரிவினருக்கானது. குஜராத்தில் இந்த தேர்தலில் புதிதாக 3.24 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
குஜராத்தில் மொத்தம் 4.09 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 80வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் 9.80லட்சம் பேர்.4.61 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். 2.53 கோடி ஆண் வாக்களார்களும், 2.37 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
போலீஸ் டிஎஸ்பி சப்-இன்ஸ்பெக்டராக பதவி இறக்கம்: உ.பி முதல்வர் ஆதித்யநாத் அதிரடி: முழுவிவரம்
இந்த தேர்தலில் வாக்களிக்கவாக்களுக்காக 51 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 1,274 வாக்குச் சாவடிகள் முழுமையாக பெண்களே நிர்வாகம் செய்யும் வகையில் சுதந்திரமும், அதிகாரமும் அளிக்கப்பட உள்ளது.
இளைஞர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் முதல்முறையாக 33 வாக்குப்பதிவு மையங்கள் இளைஞர்களால் நிர்வாகம் செய்யப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள், பார்வை மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகளும், வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
நிலக்கரி ஊழல்: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கப்பிரிவு சம்மன்
அரசியல்கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல், பிரமாணப் பத்திரம் தாக்கல் போன்றவற்றை ஆன்லைன் மூலம் சுவிதா போர்டல் மூலம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது
முதல் கட்டத் தேர்தலுக்கு, தேர்தல் அறிவிக்கை வரும் 5ம் தேதி வெளியிடப்படும். 2ம் கட்டத் தேர்தலுக்கு வரும் 10ம் தேதி வெளியிடப்படும். நவம்பர் 14ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசித் தேதியாகும், வேட்புமனு பரிசீலனை வரும் 15ம் தேதியும், வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசித் தேதி வரும் 17ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தேர்தல் ஆணையர்தெரிவித்தார்
கடந்த 2017ம் ஆண்டு இமாச்சலப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத்துக்கு வெவ்வேறு தேதிகளில் வாக்குப்பதிவு நடந்தது, ஆனால், வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் நடத்தப்பட்டது. அதேபோல இந்தமுறையும் டிசம்பர் 8ம் தேதி ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை இரு மாநிலங்களுக்கும் நடக்க உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு தேர்தலிலும் குஜராத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் தேர்தலுக்குப்பின், குஜராத், இமாச்சலப்பிரதேச தேர்தல் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. குஜராத்தைப் பொறுத்தவரை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலும் சிவோர்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் பாஜக 135 இடங்களில் இருந்து 143 இடங்களை வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.