இந்தியாவில் அறிமுகமாகும் டிஜிட்டல் நாணயம் - ரிசர்வ் வங்கி அசத்தல் அறிவிப்பு !!

By Raghupati RFirst Published Oct 31, 2022, 9:57 PM IST
Highlights

டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவில் ரூபாய்க்கு இணையான டிஜிட்டல் நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிடும் என மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். 

நாடு முழுவதும் சோதனை முறையில் டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுக செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகம் செய்யப்பட்டு, அடுத்த ஒரு மாதத்திற்குள் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

அதுமட்டுமின்றி பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, கோடக் மகேந்திரா, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி, எச்எஸ்பிசி வங்கி ஆகிய 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த நாணயம் அடுத்த ஒரு மாதத்திற்குள் முழு பயன்பாட்டிற்கு வரும் என்றும், அரசு பத்திரங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனை பயன்பாட்டிற்கு இந்த டிஜிட்டல் நாணயம் பயன்படுத்தலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க..அதிகரிக்கும் கொரோனா.. லாக்டவுனுக்கு பயந்து ஓடும் புலம்பெயர் தொழிலாளர்கள் - வைரல் வீடியோ!

இதையும் படிங்க..ட்விட்டரில் எலான் மஸ்கிற்கு உதவி செய்யும் சென்னை இளைஞர்.. யார் இந்த ஸ்ரீராம்.?

click me!