குஜராத் மாநிலம் மோர்பி நகரில் ஆற்றுப் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
பாலத்தில் மக்கள் கயிறு கம்பிகளை பிடித்துக்கொண்டு நிற்கும் வேளையில், திடீரென்று கயிறுகள் அறுந்து பாலம் கவிழந்தது. இதில் நொடிப் பொழுதில் பாலத்தில் நின்றுகொண்டிருந்த மக்கள் ஆற்றில் விழுந்து மூழ்கினர்.இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை குஜராத்தில் NDRF உடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
சுமார் 100 பேர் இன்னும் காணவில்லை. மேலும், 177 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். இந்நிலையில் மோர்பியில் நிலைமையை ஆய்வு செய்ய உயர்மட்டக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார். மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து பிரதமர் விளக்கினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்வதில் பிரதமர் வலியுறுத்தினார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை காந்திநகரில் உள்ள ராஜ்பவனில் மோர்பியின் நிலைமையை ஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
மோர்பியில் துரதிர்ஷ்டவசமான விபத்து நடந்ததில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. சோகம் தொடர்பான அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்வதில் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த உயர்மட்டக் கூட்டத்தில் முதல்வர் பூபேந்திர பாய் படேல், உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, குஜராத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி மற்றும் மாநில உள்துறை மற்றும் குஜராத் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க..அதிகரிக்கும் கொரோனா.. லாக்டவுனுக்கு பயந்து ஓடும் புலம்பெயர் தொழிலாளர்கள் - வைரல் வீடியோ!
இதையும் படிங்க..ட்விட்டரில் எலான் மஸ்கிற்கு உதவி செய்யும் சென்னை இளைஞர்.. யார் இந்த ஸ்ரீராம்.?