இதை மறக்காம செஞ்சுடுங்க..அப்படியில்ல ‘ரேஷன் கார்டு’ ரத்து - ஷாக்கிங் நியூஸ் !

Published : Apr 19, 2022, 03:41 PM IST
இதை மறக்காம செஞ்சுடுங்க..அப்படியில்ல ‘ரேஷன் கார்டு’ ரத்து - ஷாக்கிங் நியூஸ் !

சுருக்கம்

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்களின் குடும்பங்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. 

ஏழைக் குடும்பங்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதுமட்டுமல்லாமல், அரசின் நிதியுதவி போன்ற பல்வேறு உதவிகள் ரேஷன் கார்டு மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு பொருட்களை வாங்க மட்டும் அல்லாது, இன்றைய காலக்கட்டங்களில் சிலிண்டர் வாங்கவும், அடையாள ஆவணமாகவும் உள்ளது. ரேஷன் கார்டு விதிமுறைப்படி, எந்த மாதத்தில் குடும்ப அட்டைதாரர் ரேஷன் வாங்கினார், அவர் குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் போன்ற அனைத்து தகவல்களும் ரேஷன் கார்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் சமீப காலமாக ரேஷன் கடைகளில் நடைபெறும் சில மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கார்டில் தற்போது புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. ரேஷன் அட்டைதாரர், அதைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அந்த ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். 

அதாவது ரேஷன் கார்டுதாரர் ஆறு மாதங்களாக ரேஷன் வாங்காமல் இருந்தால், அவருக்கு மலிவு விலையில் கிடைக்கும் உணவு தானியங்கள் தேவையில்லை எனவோ, ரேஷன் வாங்க அவருக்குத் தகுதி இல்லை எனவோ விதிமுறைப்படி எடுத்துக்கொள்ளப்படுகிறது.

முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்த விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதாவது, தொடர்ந்து 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் ரேஷன் கார்டைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் கார்டுதாரர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அவர்களுக்குப் பதிலாக, தகுதியுடைய பிறர் பயன்பெறும் வகையில் இந்த விதிமுறை வந்துள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இந்த விதிமுறை இன்னும் அமலுக்கு வரவில்லை.

இதையும் படிங்க : தமிழகத்தை ஆளும் இரு சூரியன்கள்.. இது ஒரு தெய்வ செயல்.! தருமபுரம் ஆதீனம் அதிரடி பேச்சு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆன்லைனில் வாக்கி-டாக்கி விற்பனை.. பிளிப்கார்ட், மீஷோ உள்ளிட்ட 8 நிறுவனங்களுக்கு விழுந்த அடி!
350 ஹை-டெக் AI கேமரா.. பெங்களூரு மைதானத்தில் ரோபோ கண்காணிப்பு.. ஆர்சிபி ரசிகர்கள் குஷி!