
சார்ஜ் செய்தபடியே லேப்டாப்பை பயன்படுத்தியபோது தீப்பிடித்ததில் கடப்பாவை சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் சுமலதா படுகாயமடைந்தார். இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தீப்பிடித்த லேப்டாப்
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் மேக்கவாரி கிராமத்தைச் சேர்ந்த சுமலதா(25). பெங்களூருவில் உள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தே பணியாற்றி வருகிறார். இந்நிலையில், லேப்டாப்பில் 10% கீழ் சார்ஜ் இறங்கியதால் சார்ஜரை இணைத்து வேலை செய்துள்ளார்.
இளம்பெண் படுகாயம்
சிறிது நேரத்திற்கு பின்பு சூடான லேப்டாப் உயர் மின் அழுத்தம் காரணமாக தீப்பிடித்து எரிந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சுமலதா மீது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயமடைந்தார். மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது மகள் மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே சுமலதாவை பெற்றோர் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தீவிர சிகிச்சை
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சார்ஜ் செய்தபடியே லேப்டாப்பை பயன்படுத்தியபோது தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.