வனப்பகுதிக்குள் சென்ற சுற்றுலா பயணி....காட்டுயானையிடம் இருந்து நூழிலையில் தப்பித்த திகில் காட்சிகள்...

By Ajmal KhanFirst Published Apr 19, 2022, 12:26 PM IST
Highlights

வனப்பகுதிக்குள் சென்ற சுற்றுலா பயணியை காட்டுயானை துரத்திய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

மலைப்பகுதியை தேடி வரும் இளைஞர்கள்

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் குளுமையான இடங்களை தேடி செல்கின்றனர். அப்படி செல்பவர்களுக்கு தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு என மலை பகுதிகள் மக்களை ரசிக்க வைக்கிறது. அதிலும் ஒரு படி மேல சென்று காட்டுக்குள் டிரக்கிங் செல்ல இளைஞர்கள் ஆர்வமோடு மலை பகுதிக்கு வருகின்றனர். அவ்வாறாக வரும் இளைஞர்கள் வன விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என வனத்துறையினர் கேட்டு வருகின்றனர். இருந்த போதும் ஒரு சிலர் வன விலங்குகளை தொந்தரவு செய்து பின்னர் அதனிடம் சிக்கி உயிரை மாய்த்து கொள்ளும் நிகழ்வும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

யானையிடம் சிக்கிய சுற்றுலா பயணி

இந்தநிலையில் கர்நாடக மாநிலம் கபினி அருகில் உள்ள மைசூர்- மனடாவாடி சாலை பகுதியில் சுற்றுலா பயணி ஒருவர் தனது காரில் இருந்து இறங்கி  காட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த யானை அந்த நபரை துரத்தியுள்ளது.  இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் செய்வது அறியாமல் அலறி அடித்து ஓடியுள்ளார். அப்போதும் அந்த யானை அந்த நபரை விடாமல் துரத்தியுள்ளது. அப்போது அவரது நண்பர்கள் காரை ஸ்டார்ட் செய்து வேகமாக காரை இயக்கியுள்ளனர். அப்போது காரின் பின் பக்கத்தை தொற்றிக்கொண்டு அந்த நபர் உயிர் தப்பித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த நபர் யானையிடம் இருந்து தப்பித்துள்ளார். இந்த காட்சி தற்போது சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே காட்டுக்குள் சென்ற அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

click me!