முஸ்லிம் பெண்கள் விவாகரத்து வழக்கு.. மறுமணம் செய்தால் ஜீவனாம்சம் கிடையாது..!

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 19, 2022, 01:35 PM IST
முஸ்லிம் பெண்கள் விவாகரத்து வழக்கு.. மறுமணம் செய்தால் ஜீவனாம்சம் கிடையாது..!

சுருக்கம்

விவாகரத்து பெற்ற முஸ்லீம் பெண்கள் தங்களின் இதாத் காலம்  முடிந்த பிறகும், மறுமணம் செய்து கொள்ளும் வரை ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

முஸ்லீம் பெண்கள் விவாகரத்து பெற்றாலும், மறுமணம் செய்யும் வரை அவர்களுக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. CPC 125 பிரிவின் கீழ் விவாகரத்து பெற்ற முஸ்லீம் பெண்கள் மறுமணம் செய்யும் வரை முன்னாள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற முடியும் என நீதிபதி தெரிவித்தார். இந்த தீர்ப்பின் மூலம் பெண்கள் தங்களுக்கான இதாத் காலம் நிறைவு பெற்றாலும் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு. 

இஸ்லாமிய சட்டத்தின் படி, விவாகரத்து பெற்ற பெண் மறுமணம் செய்து கொள்ள இதாத் காலம் எனப்படும் மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். இந்த விவகாரம் நீதிபதி கருனேஷ் சிங் பவர் தலைமையிலான டிவிஷன் பென்ச் விசாரணை மேற்கொண்டது. அதில், ஜனவரி 2007 ஆம் ஆண்டு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு மற்றும் மே 2008 வாக்கில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பிரதாப்கர் பிறப்பித்த உத்தரவு உள்ளிட்டவைகளை மாற்றியமைத்து புது உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்.

வழக்கு:

விவாகரத்து பெற்ற முஸ்லீம் பெண் தனக்கும் தனது இரண்டு மைனர் குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்து இருந்தார். அதன்படி உத்தரவு வெளியான தேதியில் இருந்து ஜூவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதை அடுத்து கணவர் இந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்தார். 

மேல்முறையீட்டு வழக்கு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பிரதாப்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  கூடுதல் செஷன்ஸ் நீதிபதி, "விவாகரத்து பெற்ற முஸ்லீம் பெண் பிரிவு 3, பிரிவு 4-இன் கீழ் ஜீவனாம்சம் பெற உரிமை பெற்றவர் ஆவார். எனினும்,  CrPC 125 பிரிவின் கீழ் இவருக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது. குறிப்பாக பெண் விவாகரத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இவருக்கு முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.  இந்த பெண் CrPC 125 பிரிவின் கீழ் ஜீவனாம்சம் வழங்க கோருவது பொருத்தமற்ற ஒன்றாகும்," என தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார். 

இறுதி தீர்ப்பு:

இந்த தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முஸ்லீம் பெண் மேல் முறையீடு செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "CrPC 125 பிரிவு விவாகரத்து பெற்ற பெண்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க ஒப்புதல் அளிக்கிறது. மேலும் ஷாபனா பனோ வழக்கினை மேற்கோள் காட்டி, விவாகரத்து பெற்ற முஸ்லீம் பெண்கள் தங்களின் இதாத் காலம்  முடிந்த பிறகும், மறுமணம் செய்து கொள்ளும் வரை ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு," என தீர்ப்பு வழங்கி இருக்கிறார். 

PREV
click me!

Recommended Stories

ஆன்லைனில் வாக்கி-டாக்கி விற்பனை.. பிளிப்கார்ட், மீஷோ உள்ளிட்ட 8 நிறுவனங்களுக்கு விழுந்த அடி!
350 ஹை-டெக் AI கேமரா.. பெங்களூரு மைதானத்தில் ரோபோ கண்காணிப்பு.. ஆர்சிபி ரசிகர்கள் குஷி!