Baba Ramdev:மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்! பெண்கள் பற்றிய சர்ச்சைப் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்ததால் பணிந்தார்

By Pothy Raj  |  First Published Nov 28, 2022, 1:58 PM IST

பெண்கள் எந்த ஆடையையும் அணியாமல் இருந்தாலும் அழகாகவே இருப்பார்கள் என்று பேசியதற்கு யோகா குரு பாபா ராம்தேவ் பேசியதற்கு எதிர்ப்பு வலுத்தததால், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவி்த்து, மன்னிப்புக் கோரினார்.


பெண்கள் எந்த ஆடையையும் அணியாமல் இருந்தாலும் அழகாகவே இருப்பார்கள் என்று பேசியதற்கு யோகா குரு பாபா ராம்தேவ் பேசியதற்கு எதிர்ப்பு வலுத்தததால், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவி்த்து, மன்னிப்புக் கோரினார்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் கடந்த சில நாட்களுக்கு முன், யாகோ பயிற்சி முகாம் நடந்தது. அதில் யோகா குரு பாபா ராம்தேவ் பங்கேற்றார். அவருடன், சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே, பாடகர் அம்ருதா பட்நாவிஸ், பாஜக மூத்த தலைவரும், துணை முதல்வருமான தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

Tap to resize

Latest Videos

அந்த நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பேசுகையில் “ பெண்கள் புடவையில் அழகாக இருப்பார்கள், சல்வார் உடையிலும் அழகாக இருப்பார்கள், என்னைப்பொறுத்தவரை, பெண்கள் எதையும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள்” எனத் தெரிவித்தார்

பாபா ராம் தேவ் கருத்துக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. மகாராஷ்டிரா மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சகான்கர் பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, அடுத்த 72 மணிநேரத்துக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

அவர் கூறுகையில் “யோகா குரு பாபா ராம் தேவ், பொதுவெளியில் பெண்கள் குறித்த தரம்தாழ்ந்து கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் 72 மணிநேரத்துக்குள் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்”எ னத் தெரிவித்தார்

சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை கேள்வி எழுப்பிய காங்கிரஸின் வாக்குவங்கி தீவிரவாதம்: மோடி பேச்சு!!

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், மணிஷா காயாண்டே, கிஷோர் திவாரி, மகேஷ் டாப்சி, பெண் ஆர்வலர்கள் அபர்னா மலிகர், திருப்தி தேசாய் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து பாபா ராம் தேவ் வலியுறுத்தினர்
இதையடுத்து, யோகா குரு பாபா ராம்தேவ், பெண்கள் குறித்த தனது சர்ச்சைக்கருத்துக்கு மன்னிப்பும், வருத்தமும் தெரிவித்தார்.

இது குறித்து மகாராஷ்டிரா மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சகான்கர் ட்விட்டரில் மராட்டிய மொழியில் பதிவிட்ட கருத்தில் “ பெண்கள் குறித்த கருத்துக்கு வருத்தமும், மன்னிப்பும் கோரி பாபா ராம்தேவ் விளக்கம் அளித்துள்ளார். அதில் பெண்கள் அதிகாரத்துக்காக எப்போதும் பணியாற்றுவேன், சமூகத்தில் மதிக்கத்தக்க இடத்தில் இருக்கிறார்கள். மத்தியஅரசின் பெண் குழந்தைகள் காப்போம் என்ற திட்டம் உள்ளிட்ட பலதிட்டங்களை நான் ஆதரித்துள்ளேன்.

பெண்கள் எதையும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள்… சர்ச்சையை கிளப்பிய பாபா ராம்தேவ்!!

ஆதலால் எனக்கு பெண்களை அவமதிக்கும் எண்ணம் துளியும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். நான் யாருடைய மனதை புண்படுத்தியிருந்தாலும் அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன், இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறேன்” என கடிதத்தில் தெரிவித்துள்ளார்”எனத் தெரிவித்தார்

click me!