Vizhinjam Port:அதானி திட்டத்துக்கு எதிர்ப்பு!விழிஞ்சம் காவல் நிலையம் சூறை: 3,000 பேர் மீது வழக்கு: பதற்றம்!

By Pothy RajFirst Published Nov 28, 2022, 11:14 AM IST
Highlights

திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தில் உள்ள அதானி குழுமம் கட்டுமானம் கட்டுவதற்கு உள்ளூர் மக்கள் எதிரப்புத் தெரிவித்து நடத்திய போராட்டத்தில் காவல்நிலையம் நேற்று தாக்கப்பட்டது.

திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தில் உள்ள அதானி குழுமம் கட்டுமானம் கட்டுவதற்கு உள்ளூர் மக்கள் எதிரப்புத் தெரிவித்து நடத்திய போராட்டத்தில் காவல்நிலையம் நேற்று தாக்கப்பட்டது.

இந்தக் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்தனர். இதுவரை 5 பேர் போலீஸார் கைது செய்துள்ளனர். அங்கு பதற்றம் நீடிப்பதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அடையாளம் தெரியாத நபர்கள் என்ற அடிப்படையில் 3 ஆயிரம் பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

அதானி குழுமம் விழிஞ்சம் துறைமுகத்தில் பல்வேறு கட்டுமானப் பணிகளை கட்ட உள்ளது. இதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து,கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, உயர் நீதிமன்றத்துக்குச் சென்ற அதானி குழுமம், நீதிமன்ற அனுமதியுடன் சனிக்கிழமை முதல் கட்டுமானப்பணிகளை தொடர முடிவு செய்தது.

இதற்காக லாரிகளில் மணல், பாறைக் கற்கள் ஏற்றிக்கொண்டு வந்த லாரிகளை விழிஞ்சம் பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர். அதானி குழுமத்தின் கட்டுமானத்தை நிறுத்தக் கோரி போராட்டம் நடத்தினர். கடலோரத்தில் கட்டுமானம் எழுப்புவதால் கடல் அரிப்பு அதிகமாகிறது வாழ்வாதாரம் பாதிக்கிறது என்று மக்கள் தெரிவித்தனர். 

இதனால், போலீஸாருக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. லாரிகளை திருப்பி அனுப்பியபின்புதான் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

இந்நிலையில் அதானி குழுமத்தின் கட்டுமானம் தொடர்ந்து நடக்க ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த விழிஞ்சம் லத்தின் கத்தோலிக்க தேவாலய மக்கள் நேற்று காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியதில் மக்கள் காவல்நிலையத்தை சூறையிட்டனர்.அங்கிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.

ரயில் திருடர்கள் கேள்விப்பட்டிருக்கோம்! ரயிலையே திருடிய கொள்ளையர்களா! பீகாரில் ஸ்வாரஸ்யம்

இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். காயமடைந்த போலீஸார், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இந்த தாக்குதல் தொடர்பாக கத்தோலி்க்க பெரநகர ஆர்ச்பிஷப் தாமஸ் ஜே நெட்டோ மற்றும் பெரேரா உள்பட 15 பாதிரியார்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதற்கிடையே சமரசப் பேச்சு மற்றும் அமைதியை நிலைநாட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நகர் காவல் ஆணையர், மாவட்ட போலீஸார் அதிகாரிகள், தேவாலய பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் இன்றும் நடக்கிறது.

சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி எம் ஆர் அஜித்குமார் கூறுகையில் “ விழிஞ்சம் காவல்நிலையம் மீது கும்பல் நடத்திய தாக்குதலில் 36 போலீஸார் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை, சிலரை விடுவிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர், அது வாக்குவாதமாக மாறி வன்முறையில் முடிந்தது. காவல்நிலைய துணை ஆய்வாளருக்கு அறுவை சிகிச்சை செய்யும்அளவு காயம் ஏற்பட்டது, அந்தக் கும்பல் கற்கள், கம்பு, இரும்பு கம்பிகளைக் கொண்டு தாக்கியுள்ளனர். 

குஜராத் தேர்தல்: இதுதான் உங்கள் பாடமா? அமித் ஷாவை விளாசிய அசாசுதீன் ஒவைசி

காவலர்கள் தரப்பில் மக்களை ஆத்திரமூட்டும் வகையில் ஏதும் பேசவில்லை. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவே நடவடிக்கை எடுத்தனர். அப்பகுதியில்கூட்டத்தைக் கலைக்க குறைந்தஅளவு தடியடி நடத்தப்பட்டது. இந்ததாக்குதல் தொடர்பாக அடையாளம் தெரியாதவர்கள் என்ற அடிப்படையில் 3ஆயிரம் பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் ”எ னத் தெரிவித்தார்

மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதல்..திட்டமிட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை..14 வருஷம் ஆகியும் தொடரும் கோரிக்கை!!

பாதிரியார் எஜூனே பெரேரா கூறுகையில் “ மக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றிதான் போராட்டம் நடந்தது. இருப்பினும் எங்கள் பகுதி மக்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இன்றும் அமைதிப்பேச்சு நடக்கிறது, அதிகாரிகளுடன் பேசி சமரசத்தையும், அமைதியையும் ஏற்படுத்துவோம்”எ னத் தெரிவித்தார்
இந்த சம்பவத்தால் விழிஞ்சம் பகுதியில் 700க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் அமைதியை நிலைநாட்டவும், வன்முறை ஏற்படாமல்தடுக்கவும் கூடுதலாக 300 போலீஸார் அழைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


 

click me!