மும்பையில் 26/11 பயங்கரவாதத் தாக்குதல் நடந்து 14 ஆண்டுகள் ஆன நிலையில், பயங்கரவாதத் தாக்குதலைத் திட்டமிட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்கிறது.
மும்பையில் 26/11 பயங்கரவாதத் தாக்குதல் நடந்து 14 ஆண்டுகள் ஆன நிலையில், பயங்கரவாதத் தாக்குதலைத் திட்டமிட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்கிறது. 2008 ஆம் ஆண்டு நவ.26 ஆம் தேதி மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாதிகளில் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் இந்தியா இன்று அஞ்சலி செலுத்தியது. ஆபரேஷன் பிளாக் டொர்னாடோவின் போது நாரிமன் ஹவுஸில் நடந்த இறுதி முற்றுகைக்கு தலைமை தாங்கியவரும் NSG ஹீரோவுமான ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் சந்தீப் சென், ஏசியாநெட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், நவ.26, 2008 மும்பை தாக்குதலை பாகிஸ்தானின் உளவு அமைப்பான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் அதன் எல்இடி போன்ற அரசு சாரா நிறுவனங்கள் மூலம் நடத்தியது என்பது இப்போது வெளிப்படையாக உள்ளது.
இதையும் படிங்க: குஜராத் தேர்தல்: இதுதான் உங்கள் பாடமா? அமித் ஷாவை விளாசிய அசாசுதீன் ஒவைசி
அதை திட்டமிட்டு செயல்படுத்தியவர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர். தண்டிக்கப்படவில்லை, 140க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். வலிமையான தேசமாக, நாம் அவர்களை ஒருபோதும் மன்னிக்கக்கூடாது, அவர்களை விட்டுவிட்டால், அவர்கள் தப்பித்துவிட்டதாக உணர்ந்து ஆதாயம் தேடுவார்கள். நாடு பழிவாங்கவில்லை என்றால் பயங்கரவாதிகள் அதைத் தொடர்ந்து செய்வார்கள். அவர்கள் நம்மை பலவீனமான தேசமாகக் கருதுவார்கள். புல்வாமா மற்றும் உரி தாக்குதல்களின் போது செயல்பட்டது போல், இந்தியா தொடர்ந்து செயல்பட வேண்டும். மேலும், இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் செயல்படவில்லை என்றால், மக்கள் நம்மை தீவிரமற்ற நாடாக கருதுவார்கள்.
இதையும் படிங்க: மின்துறை சட்டத்திருத்த மசோதா!27லட்சம் மின்ஊழியர்கள் மத்திய அ ரசுக்கு எச்சரிக்கை
இந்த ஆண்டு அந்த தேதியை நாம் மீண்டும் பார்க்கும்போது, தேசிய மற்றும் சர்வதேச களத்தில் நமது செயல்பாடுகளின் முழு வரம்பையும் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. நமது நில எல்லைகள் குறித்து மட்டுமல்ல, நமது பரந்த கடலோரப் பாதுகாப்பிலும் நாம் மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும். கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் ஒருங்கிணைப்புடன், அதிக அளவில் தன்னியக்கமயமாக்கல், தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்திற்காகவும், உயிர்வாழ்வதற்காகவும் கடலில் செல்லும் மீன்பிடி படகுகளுக்கு அடையாளத்தை வழங்க வேண்டும். ஒரு வலுவான பொறிமுறையானது உருவாகி பின்னர் கண்காணிக்கப்பட்டால், எதிரிகள் கடல் வழியாக பிரதேசங்களுக்குள் நுழைய முடியாது. கண்காணிப்பை முடுக்கிவிட வேண்டும் என்று தெரிவித்தார்.