
2002 கலவரத்தை தூண்டியவர்களுக்கு பாடம் கற்றுத்தர வேண்டும் என்று குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு எஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி பதில் அளித்து விளாசியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும் இரு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
மின்துறை சட்டத்திருத்த மசோதா!27லட்சம் மின்ஊழியர்கள் மத்திய அ ரசுக்கு எச்சரிக்கை
பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், மும்முனைப் போட்டி களத்தில் நிலவியுள்ளது. பாஜக ஆட்சியைத் தக்கவைக்க கடுமையாகப் போராடி வருகிறது, பிரச்சாரமும் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கேதா மாவட்டத்தில் மகுதா நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில் “ இந்த மாநிலம் 22 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறது, 2002ம் ஆண்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
1995க்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் வகுப்புவாதக் கலவரங்கள் அடிக்கடி நடக்கும். இரு தரப்பு சமூகத்தை சண்டையிட வைத்து பயன்படுத்திக்கொண்டார்கள். இதன் மூலம் காங்கிரஸ் கட்சி வாக்குவங்கியை பலப்படுத்திக்கொண்டது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமித் ஷாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜூஹாபுராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி, பேசியுள்ளார். குஜராத் தேர்தலில் ஒவைசி கட்சி சார்பில் 14பேர் களமிறங்கியுள்ளனர்.
ரயில் திருடர்கள் கேள்விப்பட்டிருக்கோம்! ரயிலையே திருடிய கொள்ளையர்களா! பீகாரில் ஸ்வாரஸ்யம்
கூட்டத்தில் ஒவைசி பேசுகையில் “ அமித் ஷா இன்றுநடந்த பொதுக்கூட்டத்தில் 2002 குஜராத் கலவரக்காரர்களுக்கு பாடம் புகட்டுங்கள் என்று தெரிவித்துள்ளார், குஜராத்தில் நிரந்தரமான அமைதியை பாஜக உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நான் அமித் ஷாவுக்கு ஒன்று கற விரும்புகிறேன். நீங்கள் கற்றுக்கொடுத்த பாடம் என்பது, 2002 கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவை பலாத்காரம் செய்த குற்றவாளிகளை விடுவித்தது. பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தையை கொன்றவர்களைவிடுதலை செய்து கற்றுக்கொடுத்த பாடம், ஆஷன் ஜாப்ரியை கொலை செய்து எங்களுக்கு பாடம் கொடுத்துள்ளீர்கள்.
குல்பர்கா சொசைட்டி படுகொலை, பெஸ்ட் பேக்கரி எரிப்பு என நீங்கள் கற்றுக்கொடுத்த எத்தனை பாடங்களை நினைவில் வைப்பது. ஆனால், நினைவிருக்கிறது, பாடம் கற்றுக்கொடுப்பது என்பது ஒன்றுமில்லை, தவறான நீதி இழைக்கப்படும்போது, அமைதியாக இருப்பதே வலிமையானது.
அடிப்படைக் கடமைகளுக்குத்தான் முதலில் முன்னுரிமை : மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
அதிகாரம் எப்போதும் ஒருவரிடமே இருந்துவிடுவதில்லை. ஒவ்வொருவரிடம் இருந்தும் அதிகாரம் பறிக்கப்படும். அதிகார போதையில், உள்துறை அமைச்சர் பாடம் கற்றுக்கொடுங்கள் எனப் பேசியுள்ளார். என்ன பாடம் எங்களுக்கு கற்றுக்கொடுத்தீர்கள். நீங்கள் நாடு முழுவதும் அவப்பெயர் எடுத்தீர்கள், டெல்லியில் வகுப்புவாத கலவரம் நடந்ததாக நீங்கள் என்ன பாடம் கற்பித்தீர்கள்?
இவ்வாறு ஒவைசி தெரிவித்தார்