Electricity Amendment bill 2002மின்துறை சட்டத்திருத்த மசோதா!27லட்சம் மின்ஊழியர்கள் மத்திய அ ரசுக்கு எச்சரிக்கை

By Pothy RajFirst Published Nov 26, 2022, 5:44 PM IST
Highlights

மின்சாரச் சட்டத்திருத்த மசோதா குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுக்கூட்டம் பாஜக மூத்த தலைவர் ஜகதாம்பிகா பால் தலைமையில் அடுத்தவாரம் நடக்க இருக்கும் நிலையில் நாடுமுழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக 27 லட்சம் மின்துறை ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மின்சாரச் சட்டத்திருத்த மசோதா குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுக்கூட்டம் பாஜக மூத்த தலைவர் ஜகதாம்பிகா பால் தலைமையில் அடுத்தவாரம் நடக்க இருக்கும் நிலையில் நாடுமுழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக 27 லட்சம் மின்துறை ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மின்துறையில் தனியாருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மின்துறை சட்டத்திருத்த மசோதா இருக்கிறது. இந்த மசோதாவை கடந்த கூட்டத்தொடரில் மக்களவையில் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்கேசிங் அறிமுகம் செய்தார். அப்போது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து  வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து இந்த மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கர்நாடக அரசு தீவிரம்! முதல்வர் பசவராஜ் பொம்மை சூசகம்

பாஜக மூத்த தலைவர் ஜகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற நிலைக்குழு அடுத்தவாரம் கூடி இந்த மசோதாவை ஆய்வு செய்ய இருக்கிறது.

 பாஜக மூத்த தலைவர் ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் அடுத்தவாரம் வியாழக்கிழமை கூடுகிறது. இந்த மசோதாவை ஆய்வு செய்து திருத்தமின்றி மத்திய அரசு அனுப்பிவைத்தால், குளிர்காலக் கூட்டத்தொடரில் சட்டம் நிறைவேறும். 

அவ்வாறு சர்ச்சைக்குரிய மின்துறைச் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றினால், நாடுமுழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, தேசிய மின்துறை ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் கூட்டமைப்பு(என்சிசிஓஇஇஇ) எச்சரி்க்கை விடுத்துள்ளது. 

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல்: அமலாக்கப் பிரிவு இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த மசோதாவை நாடாளுமன்றத்துக்கு திருப்பி அனுப்பும் தங்களிடம் கருத்துக் கேட்குமாறு தேசிய மின்துறை ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் தேசிய மின்துறை ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் கூட்டமைப்பு, மின்துறை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் என் சவுத்ரி கூறுகையில் “ நிலைக்குழு எங்களிடம் இதுவரை எந்தவிதமான கருத்தும் கேட்கவில்லை.

 மின்துறை ஊழியர்கள், பொறியாளர்களிடம் கருத்துக்களைக் கேட்காமல், தன்னிச்சையாக சட்டத்தை நிறைவேற்றினால், 27 லட்சம் ஊழியர்களும் கடுமையாக எதிர்ப்போம், தேசிய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தார்

Bihar Rail yard: ரயில் திருடர்கள் கேள்விப்பட்டிருக்கோம்! ரயிலையே திருடிய கொள்ளையர்களா! பீகாரில் ஸ்வாரஸ்யம்

இந்திய மின்துறை ஊழியர்கள் கூட்டமைப்பின் செயலாளர் எம்.ஜி சுரேஷ் குமார் கூறுகையில் “ மின்பகிர்மான நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு எதிராக சமீபத்தில் புதுச்சேரி, உத்தரப்பிரதேச மின்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

 இரு மாநிலங்களிலும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது, இரு அரசுகளும் தனியார்மயத்தைக் கைவிட்டனர். இது மத்திய அரசுக்கு பாடம் . எங்களின் கோரிக்கை அடங்கிய மனுவை பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பாலிடம் அளித்துள்ளோம்.

 இதுவரை எந்த பதிலும் நிலைக்குழுவிடம் இருந்து வரவில்லை. அனைத்து தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்டபின் நிலைக்குழு முடிவு எடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் எங்களின் கூட்டமைப்பு  அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுக்கும் கோரிக்கைவிடுத்து, மின்துறை சட்டத்திருத்த மசோதாவை செயல்படுத்தாதீர்கள் எனக் கேட்டுள்ளோம், கடுமான எதிர்ப்பைத் தெரிவிக்க கோரிக்கை விடுத்துள்ளோம். 

இந்த சட்டத்திருத்தம் நிறைவேறினால் மின்துறையில் தனியார் நிறுவனங்கள் நுழைந்து, அரசின் கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி கொள்ளைலாபம் பார்ப்பார்கள்” எனத் தெரிவித்தார்

click me!