டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கப்பிரிவு இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கப்பிரிவு இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த குற்றப்பத்திரிகை இன்டோஸ்பிரிட் குழுமத்தின் மேலாண் இயக்குநர் சமீர் மகேந்திருக்கு எதிராக மட்டும்தான் இருக்கும். மற்றவர்களுக்கு எதிரான துணைக் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
குஜராத் தேர்தல் 2022: ரூ.10.50 கோடி மதிப்பிலான நகைகள், பணம் பறிமுதல்: தேர்தல் ஆணையம் அதிரடி
சமீர் மகேந்திருவைக் கைது செய்து நாளையுடன் 60 நாட்கள் முடிகிறது. 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால் அவர் ஜாமீன்கேட்டு முறையிட்டால் ஜாமீன் வழங்கப்படும். அதனால் அவசரஅவசரமாக அமலாக்கப்பிரிவு இன்று குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்கிறது
அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்யும் முதல்கட்ட குற்றப்பத்திரிகை ஏறக்குறைய 3ஆயிரம் பக்கங்கள் கொண்டதாக இருக்கும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே. நாக்பாலிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் ஆளும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதனால் புதிதாக 849 தனியார் மதுபார்கள் உருவாகின.
இதில் ஊழல் நடந்திருப்பதாக தலைமைச் செயலாளர் நரேஷ் குமார், துணை நிலை ஆளுநர் சக்சேனாவிடம் அறிக்கை அளித்தார். இதன்படி, மதுக்கடை உரிமமம் வழங்கியது தொடர்பாக ஊழல் நடந்துள்ளது குறித்து சிபிஐ விசாரணை நடத்த ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
இதன்படி சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து, துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, 9 தொழில் அதிபர்கள் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவுசெய்துள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதையடுத்து, அமலாக்ககப்பிரிவும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் மதுபானக்கடை ஊழல் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ நேற்று குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இதில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா பெயர் இடம்பெறவில்லை. முதல் தகவல் அறிக்கையில் சிசோடியா பெயர் இருந்தநிலையில் குற்றப்பத்திரிகையில் இல்லை.
சிபிஐ குற்றப்பத்திரிகையில் 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டியுள்ளது சிபிஐ. சிசோடியாவின் நெருங்கிய நண்பர் விஜய் நாயர், ஹைதராபாத் தொழிலதிபர் அபிஷேக் போயின்பள்ளி ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் இன்று முதல் கட்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடும் எனத் தெரிகிறது