கர்நாடக மாநிலத்தில் சமத்துவத்தை உறுதி செய்ய, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் சமத்துவத்தை உறுதி செய்ய, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
அரசியலமைப்புச் சட்ட நாள் பெங்களூருவில் இன்று கொண்டாடப்பட்டது. அப்போது முதல்வர் பசவராஜ் பொம்மை நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறுகையில் “எங்கள் அரசு, மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பொது சிவில் சட்டம் என்பது தேசிய அளவில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதியிலேயே இருக்கிறது.
பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முன், பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களை மாநில அரசு கவனித்து செயல்படும்” எனத் தெரிவித்தார்
ஷிவமோகாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்கள் மத்தியில் முதல்வர் பசவராஜ் பொம்மை பேசுகையில் “ அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது. ஆதலால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம். தீனதயாள் உபாத்யாயே காலத்தில் இருந்து பொதுசிவில் சட்டத்தை பற்றி பேசி வருகிறோம்.
இந்த தேசத்திலும், மாநிலத்திலும் பொது சிவில் சிட்டத்தை அமல்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். சரியான நேரம் வரும்போது, பொது சிவில் சட்டம் மாநிலத்தில் நடைமுறைக்கு வரும்.
மக்கள் நலனை சாத்தியமாக்கி சமத்துவத்தை கொண்டு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அதை செயல்படுத்த அனைத்து வலுவான நடவடிக்கைகளையும் எடுப்போம் என்பதை நான் மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன்.
மதமாற்றுத் தடைச் சட்டத்தை பலவரும் விமர்சிக்கிறார்கள். இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று விமர்சித்தனர். ஆனால், இப்போது உச்ச நீதிமன்றமே, வலுக்கட்டாயமாக மதம்மாற்றுவது குற்றம் என அறிவித்துவிட்டது.
பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது:ஓசன்சாட் செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்
கோயில்களை பக்தர்கள்தான் பராமரிக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இதற்காக தனியாக சட்டம் கொண்டுவரப்படும்
இவ்வாறு முதல்வர் பொம்மை தெரிவித்தார்