நாம் சுதந்திரம் பெற்று 100வது ஆண்டை நோக்கி நகரும் வேளையில், நாட்டை மிகப்பெரிய உயரத்துக்கு கொண்டுசெல்வதற்கு, அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு முதலில் முன்னுரிமை அளித்து மக்கள் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
நாம் சுதந்திரம் பெற்று 100வது ஆண்டை நோக்கி நகரும் வேளையில், நாட்டை மிகப்பெரிய உயரத்துக்கு கொண்டுசெல்வதற்கு, அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு முதலில் முன்னுரிமை அளித்து மக்கள் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்ட நாள் இன்று உச்ச நீதிமன்றத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மத்தியஅமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.
பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது:ஓசன்சாட் செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்
அரசியலமைப்புச் சட்டநாளான இன்று, பிரதமர் மோடி, விர்சூவல் ஜஸ்டிஸ் கடிகாரத்தையும், ஜஸ்டிஸ் மொபைல் செயலியையும் , மாவட்ட நீதிமன்றங்களுக்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
இன்று அரசியலமைப்புச் சட்ட நாள். அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு வழங்கிய டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை இந்த நேரத்தில் நாம் நினைவு கூற வேண்டும். நமது தேசத்தைப் பற்றி அவர்கள் கற்பனை செய்து வைத்திருந்ததை நாம் நிறைவேற்ற வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டநாளை நாம் கொண்டாடிய வேளையில் தீவிரவாதிகள், மனிதநேயத்தின் எதிரிகள் இந்தியாவில் சில ஆண்டுகளுக்குமுன் மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தினார்கள்.இந்த தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன்.
இன்றைய உலகச் சூழலில் ஒட்டுமொத்த நாடுகளின் பார்வையும் இந்தியாவின் மீது இருக்கிறது. வேகமான வளர்ச்சி, விரைவான பொருளாதார வளர்ச்சி, உலகளவிலான தோற்றம் வலிமைப்படுவது போன்றவற்றால் உலகம் நம்மை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கிறது.
குஜராத் தேர்தல் 2022: ரூ.10.50 கோடி மதிப்பிலான நகைகள், பணம் பறிமுதல்: தேர்தல் ஆணையம் அதிரடி
அனைத்துவிதமான தடைகளையும் கடந்து விட்டபின், புதிய வாய்ப்புகள் இந்தியா முன் வருகின்றன. ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை ஏற்க இன்னும் ஒருவாரம்தான் இருக்கிறது, இது மிகப்பெரிய மரியாதை. ஒரு குழுவாகச் செயல்பட்டு இந்தியாவின் தோற்றத்தை உலகின் முன் பெருமைப்படுத்த வேண்டும், பங்களிப்பு செய்ய வேண்டும். இது நம்முடைய ஒட்டுமொத்தத்தின் கடமை.
அடிப்படை உரிமைகள் என்பது குடிமக்களால் மிகுந்த அர்ப்பணிப்புடனும் உண்மையான நேர்மையுடனும் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்புகளாகும். தனிநபர்களாகட்டும், நிறுவனங்களாகட்டும், நம்முடைய கடமைகளுக்குத்தான் முதலில் முன்னுரிமை. அரசியலமைப்பின் முன்னுரையில் உள்ள மக்களாகிய நாம்' என்ற அர்ப்பணிப்பு, உறுதிமொழி மற்றும் நம்பிக்கை இந்தியாவை ஜனநாயகத்தின் தாயாக மாற்றியுள்ளது
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்