Gujarat Election:குஜராத் தேர்தல் 2022: ரூ.10.50 கோடி மதிப்பிலான நகைகள், பணம் பறிமுதல்: தேர்தல் ஆணையம் அதிரடி

By Pothy RajFirst Published Nov 26, 2022, 12:48 PM IST
Highlights

சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் குஜராத் மாநிலத்தில் இம்மாதம் 3ம் தேதி முதல் இதுவரை ரூ.10.50 கோடி மதிப்பிலான நகைகள், ரொக்கப் பணத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் குஜராத் மாநிலத்தில் இம்மாதம் 3ம் தேதி முதல் இதுவரை ரூ.10.50 கோடி மதிப்பிலான நகைகள், ரொக்கப் பணத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும் இரு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 

பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதி யாருக்கு? மானம் காக்குமா பாஜக? காங்கிரஸ், ஆம் ஆத்மி கடும் போட்டி

 பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், மும்முனைப் போட்டி களத்தில் நிலவியுள்ளது. பாஜக ஆட்சியைத் தக்கவைக்க கடுமையாகப் போராடி வருகிறது. 

காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் சவால் விடுக்கும் வகையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வியூகங்களை வகுத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் கடும் போட்டியளிக்கும் விதத்தில் ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதிகளை அளித்து வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகஆட்சியைப் பிடிக்க முடியாததால், காங்கிரஸ் கட்சியும் தீவிரமானப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முதல்கட்டத் தேர்தலுக்கு பிரச்சாரம் முடிய இன்னும்3 நாட்கள் மட்டுமே இருப்பதால், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

குஜராத் தேர்தல்: 12 அதிருப்தியாளர்கள் 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட்: பாஜக அதிரடி

இந்நிலையில் நவம்பர் 3ம் தேதியிலிருந்து குஜராத்தில் ரூ.10.49 கோடி பணம், நகைகளை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 91 ஆயிரம் பேரை முன்னெச்சரி்க்கை நடவடிக்கையாக கைது செய்து தடுப்புக் காவலில் போலீஸார் வைத்துள்ளனர். 

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் “ நவம்பர் 3ம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததில் இருந்து, நவம்பர் 25ம் தேதிவரை, பறக்கும்படையினர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள், கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.4.01 கோடி ரொக்கப் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ரூ.6.48 கோடி மதிப்பிலான நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதுவரை ரூ.61 கோடி மதிப்பிலான பல்வேறு போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Explainer: குஜராத் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியின் புதிய யுக்தி; 2024 தேர்தலுக்கு கை கொடுக்குமா?

இதுவரை தேர்தல் தொடர்பாக 29,800 வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர், தடுப்புக் காவலின்படி, 24,170 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், ரூ.13.51 கோடி மதிப்பிலான மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் தேர்தல் முடிவும் வரை மதுபான விற்பனை செய்தலும், குடித்தலும் தடை செய்யப்பட்டுள்ளது. 91,154 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது


 

click me!