PSLV C54: பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது:ஓசன்சாட் செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்

By Pothy Raj  |  First Published Nov 26, 2022, 12:10 PM IST

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் ஓசன்சாட்-3 செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோளை சுமந்து கொண்டு வெற்றிகரமாக இன்று காலை 11.56 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் ஓசன்சாட்-3 செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோளை சுமந்து கொண்டு வெற்றிகரமாக இன்று காலை 11.56 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

சதீஸ்தவாண் விண்வெளி நிலையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11.56 மணிக்கு பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. 

Tap to resize

Latest Videos

பிஎஸ்எல்விசி 54 ராக்கெட்டுக்கு 25.30 மணிநேர கவுண்ட் டவுன் முடிந்தபின் இன்று காலை 11.56 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் சுமந்து சென்ற ஓசன்சாட் செயற்கைக்கோள் சூரிய நீள்வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட 17 நிமிடங்களில் பிஎஸ்எல்வி சி54 ராக்கெட்டிலிருந்து ஓசன்சாட் செயற்கைக்கோள் பிரிந்து சென்று, வெற்றிகரமாக நீள்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்தார்

பிஎஸ்எல்விசி54 ராக்கெட்டில் மொத்தம் 8 நானோ செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு செயற்கைக்கோள்களும் வெவ்வேறு நீள்வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் பணியில் அறிவியல் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த  பணியை முடிக்க ஏறக்குறைய 2 மணிநேரம் தேவைப்படும் எனத் தெரிகிறது

pslv-c54 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது! 8 நானோ, பூடானுடன் செயற்கைக்கோள்கள் ஏவப்படுகிறது

இஸ்ரோ அனுப்பும் 84வது ராக்கெட் மற்றும் இந்த ஆண்டில் அனுப்பும் 5வது ராக்கெட் ஆகும். இஓஎஸ்-06 மிஷன் என்பது, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அனுப்பும் 56வது முயற்சியாகும், இந்த ஆண்டின் 3வது முயற்சியாகும்.

இஸ்ரோவின் ஓசன்சாட் செயற்கைக்கோளுடன், இந்தியா-பூடான் இணைந்து தயாரித்த ஆனந்த் எனும் செயற்கைக்கோளும் இதில் அடங்கியுள்ளன. இது தவிர 8 நானோ செயற்கைக்கோள்களும் உள்ளன. நானோ செயற்கைக்கோள்கள் அனைத்தும் அமெரிக்காவில் உள்ள துருவா ஏர்ஸ்பேஸ் நிறுவனம் மூலம் தயாரி்க்கப்பட்டுள்ளது. 

 

ISRO launched PSLV-C54 rocket carrying EOS-06, also known as Oceansat-3, and 8 nanosatellites from Sriharikota, Andhra Pradesh. pic.twitter.com/YHUzhgRPfq

— ANI (@ANI)

பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் மொத்தம் 44.4 மீட்டர் நீளம் கொண்டது, 321 டன் எடை கொண்டதாகும். இந்த ராக்கெட்டில் 4 ஸ்டேஜ்கள் உள்ளன. விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் அனைத்தும் பூமியில் இருந்து 737 கி.மீ தொலைவில் பூமியின் நீள்வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளன. 

கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி திம்புவுக்கு பயணம் மேற்கொண்டபோது பூடான் –இந்தியா இடையே செயற்கைக்கோள் இணைந்து தயாரிக்க ஒப்பந்தம் கையப்பமானது. அதன்படி கடந்த 2021, செப்டம்பரில் பூட்டானுடன் சேர்ந்து ஒரு செயற்கைக்கோள் தயாரித்து விண்ணில் செலுத்தப்பட்டது.

பெண்கள் எதையும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள்… சர்ச்சையை கிளப்பிய பாபா ராம்தேவ்!!

இப்போது பூடான் பொறியாளர்கள் தயாரித்த 30 செமீ அளவுள்ள கியூபிக் சாட்டிலை, வானிலிருந்து பூடானை படம் பிடித்து அனுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 15 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், தினசரி 3 முதல் 4 முறை பூடானை படம்பிடித்து அனுப்பும். ஏற்கெனவே பூடான் அரசு பூடான்-1 என்ற கல்வி தொடர்பான செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா அனுப்பும் ஓசன்சாட் செயற்கைக்கோள் பூமி கண்காணிப்புக்கும், நீர்வளங்களைக் கண்காணிக்கவும் செலுத்தப்படுகிறது. இந்த ஓசன்சாட்-3 960கிலோ எடைகொண்ட செயற்கைக்கோள், 1360வாட்ஸில் இயங்கக்கூடியது. இந்த செயற்கைக்கோள் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் மூலம் கடலின் வெப்பநிலை, அதிவிரைவான புள்ளிவிவர சேகரித்தல் போன்றவற்றை செய்ய முடியும்
 

click me!