26/11 உலகை உலுக்கிய மும்பை தீவிரவாத தாக்குதல்... இன்று 14ம் ஆண்டு நினைவு தினம்.!

By vinoth kumarFirst Published Nov 26, 2022, 11:17 AM IST
Highlights

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல்வழியாக  லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுருவி சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தி ஓபராய் ஹோட்டல், தாஜ் ஹோட்டல், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கொடூர தாக்குதல் அரங்கேற்றப்பட்டது.

மும்பை தீவிரவாத தாக்குதலின் 14வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்டிர அரசு மற்றும் மும்பை போலீசார் சார்பில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல்வழியாக  லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுருவி சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தி ஓபராய் ஹோட்டல், தாஜ் ஹோட்டல், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கொடூர தாக்குதல் அரங்கேற்றப்பட்டது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டினர் உள்ளிட்ட 166 பேர் கொல்லப்பட்டனர்.  320க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 

இதையும் படிங்க;- திட்டமிட்டு மும்பையில் 26/11 பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் நீதிக்கு முன் நிறுத்த வேண்டும்: எஸ் .ஜெய்சங்கர்

தீவிரவாதிகள் மூன்று நாட்கள் ஹோட்டல்களிலும் வைத்திருந்த பிணைக்கைதிகளை இந்தியாவின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக  பிணைக்கைதிகளை விடுவித்தனர். இதனால், மும்பை தாக்குதல் இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என்று சொல்லலாம். இறுதியில்  இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டு 2012ம் ஆண்டு நவம்பர் 21-ம் அதிகாலையில் புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார். 

இப்படி ஒரு கொடூர தாக்குதல் இனி இந்தியாவிற்கு வேண்டாம் என்பதே அனைத்து மக்களின் குரலாக ஓலித்தது. இந்த மும்பை தாக்குதலின் 14 ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்டிர அரசு மற்றும் மும்பை போலீசார் சார்பில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;-  AIIMS Delhi: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சைபர் தாக்குதல்! மாதிரி சேகரிப்பு, வெளிநோயாளிகள் பிரிவு பாதிப்பு

click me!