Bihar Rail yard: ரயில் திருடர்கள் கேள்விப்பட்டிருக்கோம்! ரயிலையே திருடிய கொள்ளையர்களா! பீகாரில் ஸ்வாரஸ்யம்

By Pothy Raj  |  First Published Nov 26, 2022, 4:19 PM IST

வீடு, நகைக்கடை, துணிக்கடை, ஹோட்டலில் கொள்ளையடித்த கொள்ளையர்களையும், ரயிலில் கொள்ளையடித்த திருடர்களையும் கேள்விப்பட்டிருக்கிறோம்.  ஆனால் ரயிலையே திருடிய திருடர்களை கேள்விப்பட்டிருக்கிங்களா….


பீகாரில் பெகுசாரை மாவட்டத்தில் சுரங்கப்பாதை அமைத்து ரயில் யார்டில் ஒட்டுமொத்த டீசல் ரயில் எஞ்சினையே ஒரு கும்பல் திருடிச் சென்றுள்ளனர்.

இந்த கும்பல் டீசல் ரயில் எஞ்சினின் பாகங்களை ஒவ்வொரு பாகமாகத் திருடி, பழுதுநீக்குவதற்கா நிறுத்தப்பட்டிருந்த ஒரு எஞ்சினையே திருடிவிட்டார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

Tap to resize

Latest Videos

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல்: அமலாக்கப் பிரிவு இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

இது குறித்து முசாபர்பூர் ரயில்வே பாதுகாப்பு படையின் ஆய்வாளர் பிஎஸ் துபே கூறுகையில் “ கார்கரா யார்டில் நிறுத்தப்பட்டிருந்த டீசல் ரயில்எஞ்சினைக் காணவில்லை என்று பருணி காவல்நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி 3 பேரைக் கைது செய்துள்ளோம்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரபாத் நகரில் உள்ள பல்வேறு பழையஇரும்பு கடைகள், குடோன்களஇல் ஆய்வு செய்தபோது ரயில்வே எஞ்சின்களின் பாகங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பழைய இரும்பு கடையின் உரிமையாளரைத் தேடி வருகிறோம்.

ரயிலின் சக்கரம், எஞ்சின் பாகங்கள், ரயிலின் எந்திரங்களை மீட்டுள்ளோம். இதுவரை 13 மூட்டைகள் ரயில் எஞ்சினை மீட்டுள்ளோம். ரயில் எஞ்சினை பகுதி,பகுதியாகத் திருடுவதற்காக பெரியசுரங்கம் வெட்டி, அதன்வழியாக பொருட்களைத் திருடர்கள் கடத்தியுள்ளார்கள். இந்த கும்பல் பாலத்தையே திருடிச் சென்றுள்ளார்கள்” எனத் தெரிவித்தார்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கர்நாடக அரசு தீவிரம்! முதல்வர் பசவராஜ் பொம்மை சூசகம்

கடந்த ஆண்டு சம்ஸ்திபூர் ரயில் எஞ்சின் டிரைவர் ஒருவர், பழங்கால நீராவி ரயில்வே எஞ்சினை விற்பனை செய்துவிட்டார். இதற்காக அவரை ரயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!