
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாரத் ஜோடோ நடைபயணத்தில் இருக்கும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, புல்லட் ஓட்டியும், சைக்கிள் ஓட்டியும், நாயைக் கொஞ்சியும் மகிழ்ந்தார்.
கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணம், தமிழகம், கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மாநிலங்களைக் கடந்து மத்தியப் பிரதேசத்துக்குள் நுழைந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 6-வது நாளாக நடக்கும் ராகுல் காந்தி இந்தூரில் இருந்து உஜ்ஜைன் நகரத்துக்கு செல்கிறார். இதற்காக இந்தூரில் உள்ள கணபதி சதுக்கத்தில் இன்று காலை ராகுல் காந்தி நடைபயணத்தைத் தொடங்கினார்.
ராகுல் காந்தி நடைபயணம் சில கி.மீ தொலைவு சென்றபின், சைக்கிளில் வந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர் நடைபயணத்தில் இணைந்தார். அவரிடம் இருந்து சைக்கிளை வாங்கிய ராகுல் காந்தி, சிறிது தொலைவு சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார்.
அடிப்படைக் கடமைகளுக்குத்தான் முதலில் முன்னுரிமை : மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
ராகுல் காந்தியின் இந்த நடைபயணத்தில் உருது கவிஞர் இந்தோரியின் மகன் சட்லஜ் ராஹத்தும் இணைந்தார்.அப்போது, ராகுல் காந்திக்கு, தனது தந்தை எழுதிய இரு நூல்களை பரிசாக வழங்கினார்.
முன்னதாக ராகுல் காந்தி, தனது நடைபயண்தின் போது புல்லட் பைக் ஓட்டி மகிழந்தார். தலையில் தலைக்கவசம் அணிந்து, புல்லட் பைக்கை இயக்கினார்.
அதானி திட்டத்துக்கு எதிர்ப்பு!விழிஞ்சம் காவல் நிலையம் சூறை: 3,000 பேர் மீது வழக்கு: பதற்றம்!
அதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தி நாய்களை வளர்ப்பதில் அலாதி இன்பமானவர். இதனால் மார்வெல் என்ற ஜெர்மன் ஷெப்பர்டு இன 10 மாதநாயைப் பார்த்ததும் அதை ராகுல் காந்தி கொஞ்சி மகிழ்ந்தார். மார்வெல் நாயும், ராகுல் காந்தியுடன் நெருங்கமானது.
விலங்குகள் நல ஆர்வலரான ராஜத் பிரசார், சர்தாக் ஆகியோர் தாங்கள் வளர்க்கும் மார்வெல் நாயுடன்ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். நாயை அழைத்து வருவதற்காகவே ராஜத் பிரசார் தனது பைக்கில் தனியாக பின்பக்கத்தில் இருக்கையே அமைத்திருந்தார்.