2024 ஜனவரியில் பிரம்மாண்டமாக திறக்கப்பட உள்ள ராமர் கோயில்.. பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த உ.பி. முதல்வர்

By Ramya sFirst Published May 25, 2023, 9:22 AM IST
Highlights

உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தி, ராமர் கோயிலின் பிரமாண்ட திறப்பு விழாவிற்கு ஆவலுடன் தயாராகி வரும் நிலையில், உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உத்தரபிரதேச அரசு அயோத்தியில் உள்கட்டமைப்புத் திட்டங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது, இதில் நகரின் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் விரிவாக்கம் ஆகியவை அடங்கும். அடுத்த ஆண்டு ஜனவரியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு உத்தரபிரதேச அரசு தயாராகி வருகிறது. சஹாதத்கஞ்ச் முதல் நயா காட் வரையிலான 13 கிலோமீட்டர் சாலையான ராம் பாதையின் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ராம்ஜானகி பாதை மற்றும் பக்தி பாதையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் வருகைக்கு ஏற்ப விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் இரண்டும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த முன்னேற்றங்கள் ஸ்ரீ ராம் ஜென்மபூமி மற்றும் ஹனுமான் கர்ஹி கோவிலுக்கு பக்தர்கள் செல்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு சோனியா காந்தி ஏன் அடிக்கல் நாட்டினார்? பாஜக கேள்வி?

ராம ஜென்மபூமி பாதை 30 மீட்டர் அகலமும், பக்தி பாதை 14 மீட்டர் அகலமும் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்துள்ளதாகவும், தற்போது நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்களின் முன்னேற்றத்தை அவர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் உத்தர பிரதேச அரசு வட்டாங்கரங்கள் தெரிவிக்கின்றன.

அயோத்தியில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் கடை வளாகத்தை பிரம்மாண்டமான கோவிலைக் கட்டுவதற்கும் மற்ற வசதிகளுக்கும் விருப்பத்துடன் வழங்கியிருந்தனர். அரசின் இழப்பீடு வழங்கும் பணிகள் எவ்வித முறைகேடுகளும் இன்றி நடைபெறுவதாகவும், திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட வளாகங்களில் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  பல கடைக்காரர்களை தங்களின் அசல் இடங்களுக்கு புனர்வாழ்வளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தமிழ் மொழி ஒவ்வொரு இந்தியனின் மொழி.. நாடு திரும்பிய பிரதமர் மோடி அதிரடி சரவெடி பேச்சு..!

click me!