அந்த நாள் மட்டும் ராமர் சிலை மீது சூரியக் கதிர்கள் படும்: படு ஜோராக தயாராகி வரும் அயோத்தி கோயில்!

By Manikanda Prabu  |  First Published Sep 13, 2023, 9:00 AM IST

அயோத்தி ராமர் கோயிலில் ஒவ்வொரு ராம நவமியின்போதும் சூரியக் கதிர்கள் ராமர் சிலை மீது படும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது


உச்ச நீதிமன்ற திர்ப்பின் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. கோயில் கட்டுவதற்காக நிதி திரட்டும் பணியில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது.

நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டு நடைபெறும் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மேலும், அயோத்தி ராமர் கோயில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Videos

undefined

இதனிடையே, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் இடம் பெற்றுள்ள சுவாரஸ்யமான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில், அயோத்தி ராமர் கோயிலில் ஒவ்வொரு ராம நவமியின்போதும் சூரியக் கதிர்கள் ராம் லல்லா (குழந்தை ராமர்) சிலை மீது படும் வகையில் வடிவமைக்கப்படும் என ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ந்த வடிவமைப்பு கோனார்க் சூரிய கோயிலில் இருந்து ஈர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருவறைக்குள் இருக்கும் தெய்வத்தின் மீது சூரியக் கதிர்கள் விழும் வகையில் கோயிலை வடிவமைக்க விஞ்ஞானிகள், வானியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

“ஒடிசாவில் உள்ள கோனார்க் சூரியக் கோயிலுக்குள் சூரியக் கதிர்கள் சென்றடைவது ஒரு உதாரணம். இத்தகைய சூழ்நிலையில், சூரியனின் கதிர்கள் கருவறையை எவ்வாறு அடைவது என்பது குறித்து அனைத்து தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் பரிசீலிக்கப்படுகிறது.” என கோயில் அறக்கட்டளையை சேர்ந்த காமேஷ்வர் சௌபால் என்பவர் தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச தேர்தல்: டெல்லியில் காங்கிரஸ் பணிக்குழு கூட்டம்!

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தின் தொழில்நுட்ப அம்சங்களை ஆராய நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷனின் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், மும்பை, டெல்லி மற்றும் ரூர்க்கி ஆகிய மூன்று ஐஐடிகளை சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

அயோத்தி ராமர் கோயிலானது அருங்காட்சியகம், காப்பக அறை, ஆராய்ச்சி மையம், ஆடிட்டோரியம், கோசாலை, சுற்றுலா மைய நிர்வாக கட்டிடம், யோகா மையம் மற்றும் பிற வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டடமாக அமையவுள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கவுள்ளார். அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

click me!