20 ரூபாய்க்கு முழு சாப்பாடு கொடுக்கும் இத்திட்டம் 64 ரயில் நிலையங்களில் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்களில் பயணிப்பவர்களுக்கு குறைந்த விலையில் திருப்தியான உணவு வழங்கும் திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. வெறும் 20 ரூபாய் விலையில் முழு சாப்பாடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 20 மற்றும் 50 ரூபாய்க்கு உணவு பொட்டலங்கள் கிடைக்கும்.
வட இந்திய உணவுகள், தென்னிந்திய உணவுகள் இரண்டும் கிடைக்கும். 50 ரூபாய் பொட்டலத்தில் 350 கிராம் வரை உணவு இருக்கும். இதில் சோலே- பத்தூரே, கிச்சடி, சோல் ரைஸ், மசாலா தோசை, ராஜ்மனா- ரைஸ் மற்றும் பாவ் பாஜி போன்ற உணவுகளை ஆகியவை கிடைக்கும். இத்துடன், ஐஆர்சிடிசி தண்ணீர் பாட்டிலும் வழங்கப்படும்.
இந்தத் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீண்ட தூரம் ரயிலில் பயணிக்கும் போது வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்றாலும், சாப்பிடும் நேரத்திற்குள் அந்த உணவு கெட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது. இதனால் பலரும் ரயிலில் விற்படை செய்யப்படும் உணவையே வாங்க வேண்டி இருக்கிறது.
வெள்ளம் போல சாலைகளில் பாய்ந்து ஓடிய 22 லட்சம் லிட்டர் ரெட் ஒயின்! போர்ச்சுகலில் நடந்தது என்ன?
இந்நிலையில், 20 முதல் 50 ரூபாய்க்கு முழு சாப்பாடு கொடுக்கப்படுவது ரயில் பயணிகள் பசியாற உதவும் திட்டமாக அமைகிறது. இந்த திட்டம் முதல் கட்டமாக நாட்டின் பல பகுதகளில் உள்ள 64 ரயில் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. முதலில் 6 மாதங்கள் சோதனை முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டம், பின்னர் விரிவாக்கப்பட வாய்ப்பு உள்ளது.
நடைமேடைகளில் அமைந்துள்ள கவுண்டர்கள் மூலம் இந்த குறைந்த விலை உணவுகளை விற்பனை செய்ய ரயில்வே வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
ஏழை எளிய மக்கள் வசதியாகப் பயணிக்க சிறப்பு ரயில்களை அறிமுகப்படுத்தவும் ரயில்வே முடிவு திட்டம் வைத்திருக்கிறது. இந்த ரயில்களில் ஸ்லீப்பர் மற்றும் பொது வகுப்புகளைக் கொண்ட 22 முதல் 26 கோச்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை! 417 காலி பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிப்பு!