Ayodhya Ram Mandir | விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகும் ராமர் கோவில்! ராம ஜென்ம பூமியிலிருந்து நேரடி தகவல்!

By Dinesh TG  |  First Published Sep 12, 2023, 8:25 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பிரம்மாண்ட முறையில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 
 


உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பிரம்மாண்ட முறையில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 

இது குறித்த முழு தகவல்களை ஏசியாநெட் செய்தி சேர்மன் ராஜேஷ் கலராவிடம் விளக்குகிறார் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கோவில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா.

Latest Videos

undefined

அவர் கூறுகையில், கோவிலின் கிழக்கு வாயில் அனைவருக்குமான பொது நுழைவாயிலாக இருக்கும் என்றார்.  பக்தர்கள் இவ்வழியாகவே வந்து  3 நடைமேடைகளை கடந்து கோவிலினுள் செல்ல வேண்டும் என்றால். ஒவ்வொரு நடைமேடை நுழைவுவாயிகளில் சிங்க சிலைகள், யானை சிலைகள் மற்றும் ஹனுமன் சிலை இருக்கும் என்றார்.  இவை அயோத்தியின் உயர் பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் வகையில் கோவில் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

வரவேற்பு நடைமேடையை கடந்து கோவிலுக்குள் நுழையும் போது, 5 மண்டபங்கள் இருக்கும். அதன் வழியே சென்று கருவறையை அடையலாம்.  இந்த ஆண்டு டிசம்பர் 31க்குள்  பக்தர்கள் வரலாம் என்றும், 5 மண்டபங்கள் வழியாக சென்று வலதுபுறத்தில் உள்ள கோவில் கருவறையை தரிசிக்கலாம். பின்னர் அவ்வழியாக வெளியேறலாம் என்றார். 

கோவில் கட்டித்தின் அடித்தளம் குறித்து நிருபேந்திர மிஸ்ரா கூறுகையில், இந்த ராமர் கோவில் பிரம்மாண்டமான முறையில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டு வருவதாக கூறினார். இதுகுறித்து மேலும் விளக்குகையில், ராமர் கோவில் அடித்தளம் மட்டும் 12 மீட்டர் ஆழம் கொண்டது என்றும், அதில் 2 மீட்டர் உயரத்திற்கு மணல், அதன் மேல் கிரணைட் 2.5 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.  அடித்தளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள கற்கள் அதிகளவு எடை கொண்டவை. இவைகள் சாதாரணமாக முடிக்கப்படவில்லை. அறிவியல் கொள்கைகளின் படி கட்டப்பட்டது என்றார்.  இந்த அடித்தளத்தில் எவ்வளவு எடைகள் தாங்கும். கற்கள் எவ்வளவு எடைகள் இருக்க வேண்டும் அனைத்தும் சென்னை ஐஐடி மற்றும் மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உதவியுடன் கணினி மூலம் உருவகப்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டது. அவர்களின் பங்கு மிக முக்கியமானது. அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், நிலநடுக்கம் தாங்கும் திறனையும் ஆய்வு செய்தனர். மேலும், எத்தகைய பேரிடர்கள் வந்தாலும் கோவிலின் நிலைத்தன்மைகுறித்தும் ஆய்வு செய்தனர். 

இவை முடிந்ததும் ஆய்வகத்தில் ஒரு முடிவுக்கு வந்து  கற்களுக்கு என்ன மாதிரியான அமைப்பை தர வேண்டும், எவ்வளவு அழுத்தம் இருக்கவேண்டும் என்பது மாதிரியான அளவீடுகளை அளித்தனர். இவ்வாறுதான் 2வது மைல்கல் தொடங்கியது. இதை நாம் முடிக்கும்போது, கற்களின் அமைப்பு மற்றும் பொறுத்தம், சொல்வதற்கு எளிதுதான், இரு கற்களின் சேர்க்கை, கூரைகளுக்கான கற்கள் பொருத்தம் இவை அமைக்க ஒரு நிபுணத்துவம் தேவைப்பட்டது. அது மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் செய்து கொடுத்தது. அவர்களது மேற்பார்வையில் கற்கள் பொருத்தப்பட்டன. இரு கற்களுக்கு இடையே 0.5மிமி இடைவெளிமட்டுமே இருக்கவேண்டும் என குறிப்பட்டனர். அவ்வாறே அமைக்கப்பட்டுள்ளது. அதன் தர ஆய்வு சோதனைகளும் வெற்றியடைந்துள்ளது என்றார். 

அயோத்தியின் சாகாப்தம்! - கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

கோவில் தூண்கள்

  • அயோத்தி ராமர் கோவில் முழுமைக்கும் சுமார் 350 தூண்கள் உள்ளது. 
  • 170 தூண்கள் கீழ் தளத்திலும், ஒவ்வொரு தூணிலும் 25 முதல் 30 வரையிலான சிற்பங்கள் செதுக்கப்படுகிறது. 
  • ஒவ்வொரு சிற்றபத்திலும் நடன அசைவுகள் செதுக்கப்பட்டுள்ளது. 

ராமர் கதை!

சிற்ப வேலைகளுடன், கோவிலைச் சுற்றி செங்கல் சுவர் கட்டும் பணிகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இந்த 750 Running feet முழுமைக்கும் ராமர் கதைகள் விளக்கப்பட உள்ளதாகவும் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தார்.  இது அடுத்த மைல்கல், எங்களது பணிகள் தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால் இது இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடியாது. அடுத்த ஆண்டு 2024 டிசம்பரில் முடிவடையும். ஜூன் 2024க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. முதற்கட்டமாக படம் வரையும் பணிகள் நடைபெறுகிறது. புகழ்பெற்ற ஓவியர் வாசுதேவ் காமத் இப்பணிகளை செய்துவருகிறார். இவர் வால்மீகி ராமாயணத்தை படமாக வரைந்துகொடுப்பார். அவ்வளவுதான். அந்த படங்கள் கொண்டு சிற்பி சிலை வடிப்பார். வாசுதேவ் காமத் சிற்பத்தை சரிபார்த்த பின்னர் இறுதியாக அவை கீழ்தள சுற்றுச்சுவற்றில் ஒட்டப்படும். இதன் மூலம் ராமர் கதை வேலைப்பாடுகள் முழுமையடையும். 

துணைக் கோவில்கள்

ராமர் கோவிலைச் சார்ந்த துணைக்கோவில்களான மகரிஷி வால்மிகி கோவில், நிஷாத்ராஜ் கோவில், சபரிமாதா கோவில் இதுபோன்று 7 கோவில்கள் உள்ளன. இவை அனைத்தும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை ராமர் கோவில் வளாகத்திற்கு வெளியே கட்டப்பட உள்ளது. அதன் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் 2024ல் தொடங்க வாய்ப்புகள் உண்டு என்றார்.  

Exclusive : அயோத்தியில் ராமர் கோவில்! - உருவாகிறது ஒரு புதிய சகாப்தம்!

ராமர் அருங்காட்சியகம்

கிடைக்கப்பெற்ற சான்றுகளின் அடிபடையில், கலைநுணுக்கங்கள் புதிய கோவிலின் அமைப்புக்கு ஏற்றதாக இல்லை. இங்கு பழமையான கோவில் இருந்தது உண்மையே, அதற்கு ஒரு பெரும் வரலாறு உண்டு.  இவை அனைத்தும் கண்காட்சி அரங்கத்தில் வைக்கப்பட உள்ளது. அது இனிமேல் தான் கட்டப்பட உள்ளது.  நெடுஞ்சாலையில் உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கத்தில் இவைகளை காட்சிப்படுத்துமாறு உத்தரபிரதேச அரசை கேட்டுக்கொண்டுள்ளோம். கோவில் வளாகத்திற்குள் அருங்காட்சியகம் கட்டப்பட்டால் கோவிலுக்கு செல்லும் மக்கள் மட்டுமே கண்காட்சியை காணக் கிடைக்கும். அதுவே தனியாக வேறுவொரு இடத்தில் இருந்தால் கண்காட்சியை அனைத்து தரப்பு மக்களும் பார்க்க இயலும் என்றார். 

சிற்பக் கலைஞர்கள் குறித்து பேசிய நிருபேந்திர மிஸ்ரா, இங்கே வேலையில் ஈடுபட்டிருக்கும் சிற்பக்கலைஞர்களில் நிறைய பேர் ஒடிசாவில் இருந்துதான் வந்துள்ளனர். ராமருடன் தொடர்புடைய பலரின் சிலைகளும், சனாதன தர்ம தத்துவத்தைப் பிரதிபலிக்கும் சிலைகளும் இடம்பெற உள்ளன. புனேயைச் சேர்ந்த ஸ்வாமி கோவிந்த் தேவ் குருஜி, அயோத்தியைச் சேர்ந்த யதீந்தர மிஸ்ரோ ஆகியோர் அடங்கிய குழுவினர் எந்த காட்சிகளை சிலையாக வடிக்கலாம் என்பதைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். தேர்வு செய்யப்படும் காட்சிகள் களிமண்ணில் உருவாக்கப்பட்டு, பின்பு அவை வெண்கலச் சிலைகளாக மாற்றப்படும் என்றார். 

இங்கே இப்போது பகவான் ராமரின் பீடம் மட்டும் இருக்கிறது. கர்ப்பக்கிரகத்தில் நிறுவப்படும் ராமர் சிலையை 3 சிற்பக்கலைஞர்கள் செதுக்கிக்கொண்டிருக்கிறார்கள். உயரம் எவ்வளவு இருக்கவேண்டும், கையில் வைத்திருக்கும் வில், அம்பு போன்றவை எப்படி இருக்கவேண்டும் என்பது போன்ற தகவல்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அயோத்தியில் தங்கியிருந்துதான் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் வடிக்கும் சிலைகளில் இருந்து ஒன்றை மட்டும் கோயில் அறக்கட்டளை தேர்வு செய்யும். அந்தச் சிலைதான் இங்கே கர்ப்பக்கிரகத்தில் நிறுவப்பட உள்ளது. 

சிலை திறப்பு எப்போது?

சிலை நிறுவப்படுவதற்கான பிரார்த்தனை மற்றும் பூஜைகள் 2024 ஜனவரி 14ம் தேதி ஆரம்பமாகும். அதில் பிரதமர் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கிறோம். 14ம் தேதி ஆரம்பிக்கும் பூஜைகள் 24ம் தேதி வரை நடைபெறும். இதற்கு இடையில் பிரதமர் குறிப்பிடும் ஒரு நாளில் ராமர் சிலை கர்ப்பக்கிரகத்தில் நிறுவப்படும். அடுத்த நாளில் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.  பிறகு தற்காலிக கோயிலில் இருக்கும் ராம் லல்லா சிலையும், உரிய மரியாதையுடன் இங்கே கொண்டுவரப்படும். நின்ற கோலத்தில் இருக்கும் ராமர் சிலைக்கு முன்பு ராம் லல்லாவின் சிலையும் வைக்கப்படும் என்றார். 

ஓன்றரை லட்சம் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு!

ராமர் கோவில் திறப்புக்கு அடுத்த நாளே 1.25 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி ஒன்றரை லட்சம் பேர் வந்தார்கள் என்றால், 12 மணிநேரத்தில் ஒவ்வொருவரும் சராசரியாக 25 வினாடிகள் தரிசிக்க முடியும் என்றார். இதுவே ராமநவமி நாளில் 17 வினாடிகள் தான் தரிசனம் செய்யமுடியும். ஏனென்றால் அப்போது கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றார். 

ராமநவமி முக்கியமான நாள். அன்றைய தினம் பகல் 12 மணிக்கு கோபுரத்தின் வழியாக வரும் சூரியக் கதிர்கள் பகவான் ராமரின் நெற்றில் விழுவது போல வடிவமைப்பபட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமான கணக்கீடுகள் புனேயில் உள்ள வான் இயற்பியல் மையத்தால் செய்யப்பட்டுள்ளன. அதன்படி கம்ப்யூட்டர் கேஜெட் ஒன்றும் பொருத்தப்பட உள்ளது. பலர் சரியாக அந்த 12 மணிக்கு இங்கே தரிசனம் செய்யக் காத்திருப்பார்கள். அனைவருக்கும் அது கிடைப்பது சாத்தியமில்லை. ஆனால், இங்கே பல இடங்களில் டிவி ஸ்கிரீன்களில் அந்தக் காட்சியைப் பார்க்க ஏற்பாடு செய்யப்படும். இருந்தாலும் பக்தர்கள் சரியாக 12 மணிக்கும் நேரடியாக தரிசனம் செய்ய ஆர்வம் காட்டத்தான் செய்வார்கள் என்றார். 

ஸ்மார்ட் சிட்டி திட்டம் 

ஸ்மார்ட் சிட்டி திட்டம் உத்தரப் பிரதேச தலைமைச் செயலாளர்  மிஸ்ரா அவர்களுக்கு மிகவும் விருப்பமான திட்டம். அவர் மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறையின் செயலாளராக இருந்தவர். அவர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறார். நெடுஞ்சாலைக்கு அருகே 1,200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு செயல்படுத்த வேண்டிய மிகப்பெரிய திட்டம் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அது நிறைவேற குறைந்தது 2-3 வருடங்கள் ஆகும் என தெரிவித்தார். 
 

click me!