சனாதன தர்ம சர்ச்சையில் சிக்கிய பொன்முடி.. இந்தியா கூட்டணி நோக்கம் இதுதான்.. வெளுத்து வாங்கிய பாஜக

By Raghupati R  |  First Published Sep 12, 2023, 6:24 PM IST

சனாதன தர்மம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மீது பாஜக கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. சனாதன தர்மம் சர்ச்சை தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த சர்ச்சையில் மவுனம் காக்கும் காங்கிரஸ் தலைமையை தாக்கி பேசியுள்ளார்.


சனாதன தர்மம் விவகாரம் குறித்து இன்று பேசிய பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், காங்கிரஸ் தலைமையை குறிவைத்து, சோனியா காந்தி இந்த விவகாரத்தில் எவ்வளவு காலம் மவுனம் காக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக சனாதன தர்மத்தை எதிர்ப்பது இந்திய கூட்டனியின் ஒரு பகுதி என்பது தெளிவாகும் என்றார்.

திமுகவின் விமர்சனத்தில் இருந்து நாங்கள் முற்றிலும் விலகிக்கொள்கிறோம், இது எங்கள் நிகழ்ச்சி நிரல் அல்ல" என்ற திட்டவட்டமான தீர்மானத்துடன் இந்த கூட்டணியை வெளிவர பாஜக வலியுறுத்தும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சாதி மற்றும் சமூகப் பின்னணியைப் பொருட்படுத்தாமல், பக்தியுடன் கடவுளை அடைய முடியும் என்று சனாதன தர்மம் நம்புகிறது.

Tap to resize

Latest Videos

சனாதன தர்மம் மற்றும் இந்து மதத்துடன் தொடர்புடைய புனித நூல்களை விமர்சிப்பதில் திமுகவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் முதல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாடி போன்ற கட்சிகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தினமும் அவமதிக்கப்படுகிறது.

அதை அவமதிப்பதை நாடு பொறுத்துக்கொள்ளாது என்று கூறினார். சமீபத்தில் இந்தியா நடத்திய G20 உச்சி மாநாட்டின் போது கோனார்க் சக்ரா மற்றும் பண்டைய நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது குறித்தும் அவர் பேசினார். சனாதன தர்மம் சர்ச்சை தொடர்ந்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

DMK Minister Thiru Ponmudi reaffirms that the I.N.D.I. alliance was formed on the plank of opposition to Sanatana Dharma.

Eradicating Hinduism seems to be a single-point agenda of the parties in the I.N.D.I. Alliance.

This is the true face of I.N.D.I. Alliance.

It is also… pic.twitter.com/vxq3eRzpM5

— K.Annamalai (@annamalai_k)

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ்-ல் வெளியிட்டுள்ள பதிவில் அமைச்சர் பொன்முடி சனாதன தர்மம் பற்றி பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், "சனாதன தர்மத்தை ஒழிப்பதற்காகவே 26 கட்சிகள் இணைந்து இந்தியா மாபெரும் கூட்டணியை உருவாக்கியுள்ளது" என்று  கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

விநாயகர் சதுர்த்தி சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முழு விபரம் இதோ !!

“அன்னைக்கே சொன்னேன்.. மாரிமுத்து செஞ்ச ஒரே தப்பு இதுதான்” ஜோதிடர் கிளப்பிய சர்ச்சை.. பரபரப்பு பேட்டி

click me!