நீலகிரி தேநீர் முதல் காஷ்மீரி பஷ்மினா வரை.. ஜி 20 விருந்தினர்களுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசுகள் என்னென்ன?

By Raghupati R  |  First Published Sep 12, 2023, 2:47 PM IST

காஷ்மீரி பஷ்மினா முதல் சுந்தர்பன் தேன் வரை, ஜி 20 மாநாட்டில் விருந்தினர்களுக்கு பிரதமர் மோடி என்ன பரிசுகளை வழங்கினார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


ஜி20 மாநாட்டிற்கு வரும் உலக தலைவர்களுக்கு காஷ்மீரி பஷ்மினா முதல் சுந்தர்பன் தேன் வரை பல அற்புதமான பரிசுகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். இந்தியாவின் கலாச்சார மரபுகளை பிரதிபலிக்கும் வகையில் பரிசுகளை  பிரதமர் மோடி.

Latest Videos

undefined

ஷீஷாம் மரத்தில் செய்யப்பட்ட இசைப்பெட்டி

ஷீஷாம் மரத்தால் செய்யப்பட்ட பொருளை பிரதமர் பரிசாக வழங்கினார். அதன் மீது பித்தளை பட்டை போடப்பட்டிருந்தது. கையால் செய்யப்பட்ட பெட்டியில் மிகவும் சிறப்பான வேலைப்பாடு செய்யப்பட்டது. இந்திய கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் இந்தப் பெட்டிக்கு ஒரு தனி இடம் உண்டு. முன்பு இது புதையல் வைக்க பயன்படுத்தப்பட்டது. பிரதமர் அளித்த பரிசு மிகவும் பிரமாண்டமானது, அது ஒரு பொக்கிஷத்திற்கு ஈடானது ஆகும்.

காஷ்மீர் பஷ்மினா

காஷ்மீரி பஷ்மினா சால்வைகள் ஆடம்பரமான துணிக்காக உலகம் முழுவதும் பிரபலமானது. பஷ்மினா சால்வை மிகவும் அரிதான துணியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த கம்பளி சாங்தாங்கி ஆட்டிலிருந்து பெறப்படுகிறது. இதற்காக ஆட்டின் முடி வெட்டப்படுவதில்லை. சாங்தாங்கி ஆடு 14,000 அடி உயரத்தில் மட்டுமே காணப்படுகிறது. பஷ்மினா சால்வைகள் பழமையான செயல்முறைகளைப் பயன்படுத்தி திறமையான கைவினைஞர்களால் வடிவமைக்கப்படுகின்றன. இது முற்றிலும் கையால் செய்யப்படுகிறது.

சுந்தர்பன் மல்டிஃப்ளோரா சதுப்புநில தேன்

உலகின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடு சுந்தரவனக் காடு. இது வங்காள விரிகுடாவில் கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் மேக்னா நதிகளின் சங்கமத்தால் உருவான டெல்டாவில் அமைந்துள்ளது. உள்ளூர் மக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து இங்குள்ள காட்டு தேனீக்களிடம் இருந்து தேன் எடுக்கின்றனர். மாங்குரோவ் தேன் ஒட்டும் தன்மை குறைவாக இருக்கும். இதில் அதிக அளவு ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இது ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

காஷ்மீர் குங்குமப்பூ

காஷ்மீரி குங்குமப்பூ சிறந்ததாக கருதப்படுகிறது. இதன் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் இதை சிவப்பு தங்கம் என்றும் அழைப்பர். குங்குமப்பூ சாகுபடியின் முழு வேலையும் கையால் செய்யப்படுகிறது. ஒரு அவுன்ஸ் குங்குமப்பூவைப் பெறுவதற்காக ஆயிரக்கணக்கான பூக்கள் கைகளால் அறுவடை செய்யப்படுகின்றன.

டார்ஜிலிங் மற்றும் நீலகிரி தேநீர்

டார்ஜிலிங் தேநீர் உலகின் மிக விலையுயர்ந்த தேநீர் ஆகும். 3000-5000 அடி உயரத்தில் டார்ஜிலிங்கின் மூடுபனி மலைகளில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களில் இருந்து பறிக்கப்பட்ட இலைகளிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. இதற்காக, மென்மையான தளிர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நீலகிரி தேயிலை தென்னிந்தியாவில் பயிரிடப்படுகிறது. இது 1000-3000 அடி உயரத்தில் வளர்க்கப்படுகிறது.

ஜிக்ரானா வாசனை திரவியம்

ஜிக்ரானா வாசனை திரவியம் உத்தரபிரதேசத்தில் உள்ள கன்னோஜில் சிறந்த படைப்பு. இது பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தின் படி தயாரிக்கப்படுகிறது. தலைசிறந்த கைவினைஞர்கள் இந்த வாசனை திரவியத்தை மல்லிகை மற்றும் ரோஜா போன்ற பூக்களிலிருந்து தயாரிக்கின்றனர்.

அரக்கு காபி

அரக்கு காபி என்பது உலகின் முதல் டெராயர் மேப் செய்யப்பட்ட காபி. இது ஆந்திராவின் அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள இயற்கை தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. விவசாயிகள் இயந்திரங்கள் அல்லது ரசாயனங்களைப் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் காபியை பயிரிடுகின்றனர். அரக்கு காபியின் வாசனை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அரக்கு காபி அதன் தனித்துவமான அமைப்பு மற்றும் சிறந்த சுவைக்காக அறியப்படுகிறது.

காதி ஆடைகள்

காதி ஆடைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. இது பருத்தி, பட்டு, சணல் அல்லது கம்பளி ஆகியவற்றிலிருந்து நெய்யப்படலாம். இது இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகும். இதற்கு மகாத்மா காந்தி பெயரிட்டார்.

நாணய பெட்டி

இந்தியாவின் G20 தலைவர் பதவியை நினைவுகூரும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி 26 ஜூலை 2023 அன்று சிறப்பு G20 அஞ்சல் தலைகள் மற்றும் நாணயங்களை வெளியிட்டார். அவர்களின் வடிவமைப்புகள் இந்தியாவின் G20 லோகோ மற்றும் 'வசுதைவ குடும்பம்' என்ற கருப்பொருளில் உள்ளன.

விநாயகர் சதுர்த்தி சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முழு விபரம் இதோ !!

“அன்னைக்கே சொன்னேன்.. மாரிமுத்து செஞ்ச ஒரே தப்பு இதுதான்” ஜோதிடர் கிளப்பிய சர்ச்சை.. பரபரப்பு பேட்டி

click me!