நிபா வைரஸ் எப்படி பரவுகிறது அதன் அறிகுறிகள் என்னென்ன, அதற்கு என்ன சிகிச்சை என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் காய்ச்சலால் இரண்டு ‘இயற்கைக்கு மாறான’ மரணங்கள் பதிவாகியதை அடுத்து அம்மாநில அரசு நிபா எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. நிபா என்பது ஜூனோடிக் வைரஸ் ஆகும், இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் பின்னர் மற்ற மனிதர்களுக்கும் பரவுகிறது. இந்த வைரஸ் முதன்முதலில் நிபா என்ற மலேசிய கிராமத்தில் கண்டறியப்பட்டதால் அதற்கு நிபா என்று பெயரிடப்பட்டது. நிபா வைரஸ் எப்படி பரவுகிறது அதன் அறிகுறிகள் என்னென்ன, அதற்கு என்ன சிகிச்சை என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நிபா வைரஸ் எப்படி பரவுகிறது?
undefined
வௌவால்கள் இந்த வைரஸ் பரவுகிறது. வைரஸால் பாதிக்கப்பட்ட வௌவால்கள் மூலம் மனிதர்களுக்கோ அல்லது பிற விலங்குகளுக்கோ இந்த வைரஸ் தொற்று பரவுகின்றன. பாதிக்கப்பட்ட விலங்குடன் அல்லது அதன் உடல் திரவங்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தால் இந்த வைரஸ் பரவும் அபாயம் அதிகமாகும். பாதிக்கப்பட்ட நபர் மூலம் மற்றொரு நபருக்கு இந்த வைரஸ் பரவலாம்.
நிபா வைரஸ் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்?
நிபா தொற்று சுவாச பிரச்சனைகள் முதல் ஆபத்தான மூளைக்காய்ச்சல் வரையிலான பிரச்சனைகளை ஏற்படுத்தும். காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும். நோய் உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் வலிப்பு முதல் கோமா வரைக்கு கூட செல்லலாம். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நிபா தொற்று நோயாளிகளின் இறப்பு விகிதம் 40 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை உள்ளது.
கேரளாவில் 2 இயற்கைக்கு மாறான மரணங்கள் : நிபா எச்சரிக்கை விடுத்த அரசு..
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நிபாவுக்கு குறிப்பிட்ட மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் எதுவும் தற்போது கிடைக்கவில்லை. "கடுமையான சுவாச மற்றும் நரம்பியல் சிக்கல்களுக்கு சிகிச்சையளிக்க தீவிர ஆதரவு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது" என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மக்களிடையே நிபா தொற்று பரவலை தடுக்க க்க ஒரே வழி விழிப்புணர்வைப் பரப்புவதே என்றும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.
பழங்களை சாப்பிடுவதற்கு முன் நன்கு கழுவி சாப்பிட வேண்டும் என்றும் நிபா வைரஸால், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்ட பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தரையில் விழுந்த பழங்களை சாப்பிடுவதைத் தவிர்ப்பது, பன்றிகளுக்கு உணவளிப்பதைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் நோய் பரவலை தடுக்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
தென்னிந்தியாவில் முதல் நிபா வைரஸ் பரவல் 2018 இல் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பதிவானது. அதன் பின்னர் 2021 இல் கோழிக்கோடு மாவட்டத்தில் மிகப்பெரிய வைரஸ் பரவல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.