ரூ. 5,000த்தை ரூ. 31,904 ஆயிரம் கோடியாக உயர்த்திய பிக் புல் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா!!

Published : Aug 14, 2022, 10:35 AM ISTUpdated : Aug 14, 2022, 05:43 PM IST
ரூ. 5,000த்தை ரூ. 31,904 ஆயிரம் கோடியாக உயர்த்திய பிக் புல் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா!!

சுருக்கம்

இந்திய சந்தைகளின் முகங்களில் ஒருவராக அறியப்படும் முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆகஸ்ட் 14 ஆம் தேதி தனது 62 வயதில் இறந்தார். தலால் தெருவின் 'பிக் புல்' என்றும் அழைக்கப்பட்டு வந்தார். இன்று தனது கடைசி மூச்சை இழந்தார். 

1985 ஆம் ஆண்டு, வெறும் ரூ. 5,000 நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினார் ஜுன்ஜுன்வாலா. பின்னாட்களில் இந்தியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தை முதலீட்டாளராக உருவானார். அவருடைய முதலீட்டை  (போர்ட்ஃபோலியோ இன்றைய கணக்குப்படி) ரூ.31,904 ஆயிரம் கோடியாக உயர்த்தினார். இவரது சொத்து மதிப்பு 43,800 ஆயிரம் கோடியாகும்.

உதாரணத்திற்கு ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஒரு குறிப்பிட்ட பங்கு பற்றி பேசினால், அந்தப் பங்கு சந்தையில் பெரிய அளவில் லாபத்தை பெற இருக்கிறது என்று பொருள். இதற்கு உதாரணம்தான் டைட்டன் பங்குகள். சமீபத்தில் இதுபற்றி குறிப்பிட்டு இருந்தால், சந்தையிலும் இது பெரிய அளவில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்தது.

பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மரணம்; பிரதமர் இரங்கல்!!

அவருக்கு கிடைத்த முதல் பெரிய லாபம் 1986 ஆம் ஆண்டு டாடா டீயில் இருந்து கிடைத்தது என்று கூறலாம். இன்றுவரை அவரது மிகப்பெரிய முதலீடு டைட்டனில் ரூ. 7,000 கோடியாக இருப்பதாக கூறப்படுகிறது. இவை தவிர, பல ஆண்டுகளாக, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், அரபிந்தோ பார்மா, அயன் எக்ஸ்சேஞ்ச், லூபின், ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸ், விஐபி இண்டஸ்ட்ரீஸ், ராலிஸ் இந்தியா, ஜூபிலண்ட் லைஃப் சயின்சஸ் மற்றும் பலவற்றில் அவரது முதலீடுகள் அடங்கும்.

இந்தியாவின் வாரன் பபெட்.. இந்த விஷயத்தில் கில்லியாக அறியப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா யார்?

ஜுன்ஜுன்வாலா சமீபத்தில் ஆகாசா ஏர் விமானத்தில் முதலீடு செய்து இருந்தார். மேலும், விளம்பரதாரராகவும் திகழ்ந்தார். கடந்த வாரம் ஆகாசா ஏர் விமான சேவை துவக்கி வைக்கப்பட்டது. ''குறைந்த கட்டண விமானம் அல்ல; இது மிகவும் சிக்கனமான விமான நிறுவனம்'' என்று அழைத்தார். வரும் நாட்களில் மிகப் பெரிய லாபத்தை ஆகாசா ஏர் ஈட்டித் தரும் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருந்தார். 

உலக அளவில் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று கொண்டு இருந்தபோதும், இந்தியப் பொருளாதாரம் மற்றும் சென்செக்ஸ், நிப்ஃடி மீது  அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. இவை இரண்டும் பொருளாதார சரிவுக்கும் இடையே நல்ல வளர்ச்சியைப் பெறும் என்று முதலீட்டலர்களுக்கு நம்பிக்கை தெரிவித்து இருந்தார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்து இருந்த பேட்டியிலும் இதே நமபிக்கையை அளித்து இருந்தார். வேகமாக வளராவிட்டாலும், வளர்ச்சி சிறியதாக இருக்கும் என்று நம்பிக்கை அளித்து இருந்தார்.

பொதுத்துறை வங்கிகள் தான் தனது இலக்கு என்றும் ஜுன்ஜுன்வாலா கூறியிருந்தார். பொதுத்துறை  வங்கிகளில் முதலீடு செய்வதிலும் ஆர்வமாக இருக்கிறேன் என்றார். இதற்குப் பின்னால் உள்ள தனது நியாயத்தையும் விளக்கினார். வங்கிகளின் கடன் உயர்ந்தாலும், அதன் விளைவாக வங்கிகளின் மதிப்பும் அதிகரிக்கும் என்றார். "பொதுத்துறை வங்கிகள் வைப்புத்தொகையைச் பெரிய அளவில் சேகரிக்கும் சக்தியைக் கொண்டுள்ளன," என்று என்றார். 

இந்தியா பங்குச் சந்தை முதலீட்டாளராக, வழிகாட்டியாக, தொலைநோக்கு மற்றும் நம்பிக்கை கொண்ட ஒருவரை இழந்துவிட்டது. 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இன்றும் விமான ரத்துகள் இருக்கலாம்.. இண்டிகோவுக்கு டிஜிசிஏவின் அதிரடி நோட்டீஸ்! எப்போது சரியாகும்?
அதிர்ச்சி செய்தி! கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான சோகம்