அடக்கடவுளே அறிகுறிகளே இல்லை ஆனால்... முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 29, 2021, 10:56 AM IST
அடக்கடவுளே அறிகுறிகளே இல்லை ஆனால்... முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி...!

சுருக்கம்

முதலமைச்சரின் மனைவிக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

​இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையாக முயற்சித்து வருகின்றன. ஆனால் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல மடங்காக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் கொரோனாவால் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலதரப்பட்டவர்களும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.79 லட்சம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைப் போலவே ராஜஸ்தானிலும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு, இலவச கொரோனா தடுப்பூசி என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெஹலாட் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சர் அசோக் கெஹலாட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், எனது மனைவி சுனிதாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நானும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். வீட்டிலிருந்த படியே அரசு அலுவல்களை மேற்கொள்ளேன் என நேற்று தெரிவித்திருந்தார். 

முதலமைச்சரின் மனைவிக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள கொரோனா பரிசோதனை முடிவுகளின் படி ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “எனக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அறிகுறிகள் ஏதும் இல்லை. நலமாக இருக்கிறேன். தனிமையில் இருந்து கொண்டே எனது பணியை தொடருவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
சத்தீஸ்கர் ரயில் விபத்துக்கு தகுதியற்ற ஓட்டுநர் தான் காரணம்.. விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!