மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி... தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட முதலமைச்சர்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 28, 2021, 08:24 PM IST
மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி... தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட முதலமைச்சர்...!

சுருக்கம்

மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால்  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தம் ஒரு கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து இந்தியாவில் மொத்த பாதிப்பு ஒரு கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 293 பேர் கொரோனாவால் இறந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 2 லட்சத்து ஆயிரத்து 187 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 162 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் ஒரு கோடியே 48 லட்சத்து 17 ஆயிரத்து 371 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 29 லட்சத்து 78 ஆயிரத்து 709 பேர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.


இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைப் போலவே ராஜஸ்தானிலும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு, இலவச கொரோனா தடுப்பூசி என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெஹலாட் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முதலமைச்சர் அசோக் கெஹலாட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், எனது மனைவி சுனிதாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நானும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். வீட்டிலிருந்த படியே அரசு அலுவல்களை மேற்கொள்ளேன் என தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!