அடக்கொடுமையே... பிரதமர் மோடியின் சித்தி கொரோனாவுக்கு பலி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 28, 2021, 06:44 PM IST
அடக்கொடுமையே... பிரதமர் மோடியின் சித்தி கொரோனாவுக்கு பலி...!

சுருக்கம்

இந்தியா முழுவதும் கொரோனாவால் மரண ஓலங்கள் கேட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி குடும்பத்தில் நடந்தேறியுள்ள அதிர்ச்சி சம்பவம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால்  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தம் ஒரு கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து இந்தியாவில் மொத்த பாதிப்பு ஒரு கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 293 பேர் கொரோனாவால் இறந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 2 லட்சத்து ஆயிரத்து 187 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 162 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் ஒரு கோடியே 48 லட்சத்து 17 ஆயிரத்து 371 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 29 லட்சத்து 78 ஆயிரத்து 709 பேர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

இந்தியா முழுவதும் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்று அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என எவ்வித பாகுபாடும் இன்றி ஏராளமானோரை பாதித்து வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனாவால் மரண ஓலங்கள் கேட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி குடும்பத்தில் நடந்தேறியுள்ள அதிர்ச்சி சம்பவம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 

பிரதமர் மோடியின் தந்தை தாமோதர் தாசின் சகோதரரான ஜக்ஜீவன் தாஸின் மனைவியான நர்மதா பெனுக்கு (80) கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலமானார். இதுகுறித்து உறுதிபடுத்தியுள்ள பிரதமரின் சகோதரர் பிரஹலாத் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘சித்திக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார்’ என பதிவிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது..! பதிலடி முன்பை விட இன்னும் பயங்கரமா இருக்கும்..! அசிம் முனீர் மிரட்டல்..!
இந்தியா-ரஷ்யா நட்பால் வயிற்றெரிச்சல்..! கதறப்போகும் தென்னிந்திய விவசாயிகள்..! டிரம்ப் எடுத்த அதிர்ச்சி முடிவு..!