
ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் வீசிய பயங்கர சூறைக்காற்றில திருமண மண்டபம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்தார்கள். 28 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாராத்பூரில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த வனத்துறையில் பணிபுரியும் மாலி என்பருக்கு அங்குள்ள அன்னபூரணா திருமண மண்டபத்தில் திருமயம் நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி அவரது உறவினர்கள் ஏராளமானோர் மண்டபத்தில் குவிந்திருந்தனர். அப்போது அங்கு சூறைக்காற்றுடன் காற்றுடன் கன மழை பெய்தது. இதில் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி பெண்கள், குழந்தைகள் என 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 28 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று இடிபாடுகிளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் கனமழை மற்றும் சூறைக்காற்றால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருட்டாக இருந்ததால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பலத்த காற்றின் காரணமாக இந்த விபத்து நிகழ்த்திருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.