
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களின் ெவளிநாட்டு பயணங்களின் செலவுகளை வௌியிடக் கோரி அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா நேற்று உண்ணாவிரதம் இருந்தார். அப்போது திடீரென அவர் தாக்கப்பட்டார்.
நீக்கம்
ஆம் ஆத்மி கட்சியில் அமைச்சராக இருந்த கபில் மிஸ்ராவை சமீபத்தில் நீக்கி அந்த கட்சியின் தலைவரும், முதல்வருமானஅரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.
இதையடுத்து, முதல்வர் கெஜ்ரிவால் மீது அடுக்கடுக்கான புகார்களை மிஸ்ரா வௌியிட்டார். முதல்வர் கெஜ்ரிவால் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றார் என்று பரபரப்பு குற்றச்சாட்டை மிஸ்ரா கூறினார். சி.பி.ஐ. அமைப்பிடம் ஆதாரம் அளிப்பேன் என்றார்.
உண்ணாவிரதம்
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களின் ெவளிநாட்டு பயணங்களின் செலவுகளை வௌியிடக் கோரி கபில் மிஸ்ரா தனது இல்லத்தில் நேற்று உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், “ ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களின் ெவளிநாட்டு பயணங்களின் செலவுகளை வௌியிடும் வரை நான் உண்ணாவிரதம் இருப்பேன்.
அறிவிப்பு
இது தர்ணா போராட்டம் அல்ல, சத்தியாகிரஹ போராட்டம்.சத்தியேந்திர ஜெயின், ஆஷிஸ் கேதான், ராகவ் சத்தா, சஞ்சய் சிங்,துர்கேஷ் பதக் ஆகிய 5 தலைவர்களின் வெளிநாட்டு பயணச் செலவுகளை முதல்வர் கெஜ்ரிவால் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
என்னை சட்டசபையில் இருந்து நீக்க முயற்சிக்கிறார்கள். என்னை எதிர்த்து எந்த தொகுதியிலும் நீங்கள் போட்டியிட தயாரா?. உங்கள் பக்கம் மக்கள் இருக்கிறார்கள் என நம்பினால், நான் பதவி விலக தயார்’’ எனத் தெரிவித்தார்.
தாக்குதல்
இதற்கிடையே கபில் மிஸ்ரா உண்ணாவிரதம் இருந்தபோது, ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என்று சொல்லிக்கொண்டு வந்த நபர் ஒருவர், தீடிரென கபில் மிஸ்ராவை தாக்கினார். இதைப் பார்த்த போலீசார் உடனடியாக அந்த நபரை பிடித்து இழுத்து வௌியேகொண்டு வந்தனர்.
ஆம் ஆத்மி கட்சியா?
அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் ஆம் ஆத்மிகட்சியை சேர்ந்தவர் இல்லை என்றும், அவர் பெயர் அங்கித்பரத்வாஜ் எனத் தெரியவந்தது. அந்த நபர் போலீசிடம் கூறுகையில், “ என்னை யாரும் அனுப்பவில்லை, நான் சுயமாகவே வந்தேன். ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்தவன். கட்சிக்கு துரோகம் செய்ததால் கபில்மிஸ்ராவை தாக்கினேன்’’ என்றார்.
மறுப்பு
ஆனால், ஆம் ஆத்மி கட்சியோ பரத்வாஜ் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் இல்லை. பாரதியஜனதா கட்சியின் இளைஞர் அணியானபாரதிய ஜனதா யுவ மோர்சா அமைப்பைச் சேர்ந்தவராக இருப்பார் எனத் தெரிவித்தனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை பா.ஜனதா யுவ மோர்ச்சாவும் மறுத்துள்ளது.
கொலைமிரட்டல்
இது குறித்து கபில் மிஸ்ரா கூறுகையில், “ நான் உண்ணாவிரதம்இருந்து போது, திடீரென பாய்ந்த ஒரு நபர் என் கழுத்தைப் பிடித்து இறுக்கி, உன்னை கொலை செய்யப்போகிறேன் என்றார். உடனே எனது உதவியாளர்கள் அவரைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்’’ என்றார்.